Home சிறப்புச் செய்திகள் வன, உயிரினஆராய்ச்சியில் ஒரு பெண் புகைப்பட கலைஞர்

வன, உயிரினஆராய்ச்சியில் ஒரு பெண் புகைப்பட கலைஞர்

67
0
SHARE

வித்தியாசமான துறைகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் ஆற்றலை நிரூபிப்பது பெண்களுக்குப் பிரியமான விஷயமாகிவிட்டதுஅவர்கள் வரிசையில் இப்பொழுது ஜானகி.

வன உயிரின ஆராய்ச்சியில் ஈடுபடும் மிகச் சில தமிழகத்துப் பெண்களில் ஜானகியும் ஒருவர். இது பற்றி அவர் கூறும் போது, ‘‘விளம்பரப் படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் எடிட்டிங் செஞ்சது என் ஆரம்பம். பாம்புகளைப் பாதுகாக்குறதுக்கான ஒரு விழிப்புணர்வுப் படத்துக்காக கிண்டியில் இருக்குற பாம்புப் பண்ணைக்கு அடிக்கடி போய் வந்தேன். இதுக்காக பிரபல புகைப்படக் கலைஞர் ஹாரிமில்லர், பாம்பு ஆராய்ச்சியாளர் ரோமுலஸ் விட்டேகர் போன்றவர்களைச் சந்தித்தேன். அந்தத் துறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

பாம்புகளின் குணங்களைப் புரிந்து கொண்டால், அவற்றுக்குப் பயப்படத் தேவையில்லை. நமக்குச் சொந்தமா வீடு இருக்குற மாதிரி பாம்புக்கும் குறிப்பிட்ட பரப்பளவு வாழிடம் இருக்கு. அந்த  எல்லைக்குள்ளதான் சுத்தி வரும். இணையை தேடுற பருவகாலத்தில் மட்டும் இந்த வாழிடத்தின் பரப்பளவு கூடும்.

சிலமுக்கியமானதகவல்கள்

ஹாலிவுட் படங்களின் பாணியில், ராட்சஸப் பல்லிகளானகோமோடோக்களால் துரத்தப்பட்ட சம்பவமும் என் நாட்குறிப்பில் உண்டு.

‘‘ இந்தோனேஷியாவில் எங்க கேமராவுக்கு விதவிதமான காட்சி கொடுத்துக்கிட்டு இருந்த ஒரு கோமோடா,  திடீர்னு கோபமடைந்து துரத்துவதை என்னால் மறக்கவே முடியாது.

கொஞ்ச நேரத்துல கூடுதலா ரெண்டு கோமோடோக்கள் அந்த துரத்தலில் சேர்ந்துக்கிடுச்சு. ஒரு ராட்சத பல்லி நம்மள துரத்தறது வித்தியாசமான அனுபவம் தான்என்று சொல்லும் ஜானகியின் முழுக்கவனமும் இப்போது அவர் நடத்தி வரும் பதிப்பகத்தின் மீது தான் இருக்கிறது.

வன உயிரினங்கள் மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவும் வகையில் நுட்பமான தகவல்கள் அடங்கிய புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் முதல்கட்டமாகஸ்நேக்ஸ் ஆஃப் இந்தியாஎன்கிற புத்தகத்தை வெளியிட்டுள்ளார் ஜானகி. காடுகள் அழிக்கப்படும்போது சிறுத்தை, யானை, குரங்குகள் போன்ற விலங்குகள் ஊருக்குள் நுழைவதால் ஏற்படும் மோதல்களுக்கு தீர்வு காணும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார்,

‘‘உலகம் முழுவதும் வன உயிரினங்கள் பற்றி பத்திரிகைகளிலும் தனிப்பட்ட ஆராய்ச்சிகளிலும் வெளிவந்த செய்திகளைத் தொகுத்து, ஒரு எளிமையான ஆவணமாக மாத்தணும்ங்கிறதுதான் என்னோட நோக்கம்’’ என்கிறார் ஆர்வமுடன் ஜானகி.