Home சுடச்சுட கொசுமருந்து கொள்முதல்: அதிகாரிகளுக்கிடையே மோதல்…!

கொசுமருந்து கொள்முதல்: அதிகாரிகளுக்கிடையே மோதல்…!

12
0
SHARE

இளைஞர்கள் தமிழ் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்..என்ன தாத்தா  இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும் என்று நீங்க சொன்னது உண்மையாகிவிட்டதே என்றான் திலக்கேஷ்.

ஆமாம்தாத்தாநீங்கசரியாத்தான்சொன்னீங்கஎன்று ஆமாம் சாமி போட்டான் தருணேஷ். நீ எப்பவும் திலக்கேஷ் சொல்றதுக்கு ஆமாம் சாமி மட்டும் போட்டுக்கிட்டு இருநீயா சுயமா ஒன்றும் கேட்காதே என்று தருணேஷை நக்கல் செய்த தாத்தாஅக்டோபர் 3&ம் தேதியும் விசாரணைதான் நடக்கும், இரட்டை இலை சின்னத்தை முடக்குவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது என்று தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்படியா தாத்தா என்று இளைஞன் நித்தீஷ் கேட்கநாம் எப்போதும் உண்மையைத்தான் சொல்வோம் என்று கூறிய தாத்தா சிரித்தார்.

பா... தமிழ்நாட்டில் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காக தி.மு.. தலைமை அகில இந்திய அளவில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணி கட்சியாக, தி.மு..வுடன் இருக்கிறது.  விரைவில் தமிழ்நாட்டில்  உள்ளாட்சி தேர்தல்  2019&ல், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், மத்திய,மாநில அரசுகளை கண்டித்து, தேர்தல் பிரசாரத்தை துவக்கும் வகையில், நவ., 7ல், ஸ்டாலின், மீண்டும் பயணத்தை துவங்குகிறார். சென்னையில் நடக்கும் இதன் துவக்க விழாவில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, நடை பயணத்தை துவக்கி வைக்கிறார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில், காங்., துணைத் தலைவர்,ராகுல் பங்கேற்கிறார். மாநில அரசின் ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மட்டுமே மீண்டும் தி.மு..வால் ஆட்சி அமைக்க முடியும்.  லோக்சபா தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். பார்ப்போம்பார்ப்போம்எழுச்சி பயண நாயகன்  என்ன செய்கிறார்என்று போகப்போகத்தான் தெரியும் என்றார், தாத்தா. இளைஞர்களும் அவரது கருத்தை ஆமோதித்தனர்.

   தமிழகத்தில் பழைய வாகனங்கள் விற்பனைக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்த,  இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனைஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில், 2.48 கோடி வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன. புதிய வாகனங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள், அதற்கான தவணைத் தொகை வசூலாகாத பட்சத்தில், பறிமுதல் செய்து, குறிப்பிட்ட கால அவகாசத்தில், ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றன.

இதே போல, தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை, ஆந்திரா, கேரளா மற்றும் வடமாநில பஸ் உரிமையாளர்கள் வாங்கி, அவற்றில் மாற்றம் செய்து இயக்குவதும், வழக்கத்தில் உள்ளது. மத்திய அரசு, பழைய வாகனங்கள் விற்பனைக்கு, 18 சதவீதம் வரியை அமல்படுத்தி உள்ளது. இந்த வரியை, வாகனத்தை விற்பனை செய்பவர்களே செலுத்த வேண்டும். இதனால், இழப்பை தவிர்க்கும் வகையில், பழைய வாகனங்களுக்கான ஏலத்தை, சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன என்று தாத்தாவின் நண்பர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியை இளைஞர்களுக்கு படித்துக் காட்டினார்,தாத்தா.

கொசுமருந்துகொள்முதலில்சுகாதாரத்துறைஅதிகாரிகளுக்கும் , உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதனால்  தமிழகத்தில், போதிய அளவு கொசு மருந்துகள் கையிருப்பு இல்லாததால், கொசுவை ஒழிக்க முடியவில்லைஎன, சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சலின் தாக்கம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில், சுகாதாரத்துறை மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும், கொசு மருந்து தட்டுப்பாடு உள்ளதால், கொசு ஒழிப்பு பணியில் முன்னேற்றம் இல்லை .

  ஒரு கொசு, 1,500 முட்டையிடும். கொசு உற்பத்தியை தடுக்க, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது, பல இடங்களில், கொசு மருந்து அடிக்கும் பணியும், தெளிக்கும் பணியும் நடைபெறுவதில்லை. சம்பந்தப்பட்ட துறையிடம் காரணம் கேட்டால், நிதி இல்லாததால், போதிய அளவு கொசு மருந்து கொள்முதல் செய்யவில்லை.  இதை தவிர உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ழிமிஜிகிறிளிலி மிழிஞிஹிஷிஜிஸிமிணிஷியின் றிஹ்க்ஷீமீtலீக்ஷீuனீ கொசு மருந்தை கொள்முதல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அதிகாரிகள் ழிமிஜிகிறிளிலி மிழிஞிஹிஷிஜிஸிமிணிஷியின் றிஹ்க்ஷீமீtலீக்ஷீuனீ கொசு மருந்தை பெங்களூரில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்த போது, மருந்து தரமில்லை என்று ஆய்வின் முடிவு வந்துள்ளது. அதனால் அதை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளே கொசு மருந்து கொள்முதல் செய்ய அனுமதி அளித்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் நிதி இல்லை. அதனால் கொசு மருந்து கொள்முதல் செய்யப்படவில்லை. அதனால் கொசுவை கட்டுப்படுத்த முடியாமல் பலியானவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகாரித்துக் கொண்டே இருக்கிறது என்ற தாத்தா, சில ஆதாரங்களை காட்டி விளக்கம் அளிக்க, இளைஞர்கள் பதில் பேச முடியாமல் தடுமாறினர்.

தாத்தாவும்சரிபோயிட்டுவாங்கநாளை பார்க்கலாம் என்று இளைஞர்களை அனுப்பிவிட்டு, ஒய்வாக சில  ஆர்.டி.. தகவல்களை படிக்க தொடங்கினார்.