Home தமிழகம் 12&ம் வகுப்பு முடித்தவுடன் வேலைக்குஉத்தரவாதம்அளிக்கும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன்...

12&ம் வகுப்பு முடித்தவுடன் வேலைக்குஉத்தரவாதம்அளிக்கும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

7
0
SHARE

சென்னை, அக்.25& 

12 ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களின் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதியப் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது என அமைச்சர் கே..செங்கோட்டையன் பேசினார்.

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் வழங்கி பேசும்போது:

அசோக் நகர் பள்ளியில் மாணவிகள் தமிழ்தாய் வாழ்த்தின் போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பதை விடுத்து, தலைக்குனிந்த பிறந்த தாய் மண்ணிற்கு வணக்கம் தெரிவிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாம் பிறந்த தாய் மண்ணிற்கு பெருமை இருக்கிறது. சிறந்த கல்வியாளர்களை உருவாக்க இருப்பதை ஏற்பது போல் இந்த கடவுள் வழிபாடு அமைந்தது.

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொறுப்பில் இருக்கும் போது தான் கல்வித்துறைக்கு ரூ.26,932 கோடியை ஒதுக்கி தந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம். நீட் தேர்விற்காக தமிழகம் முழுவதும் 412 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதில் அசோக் நகர் பள்ளியில் நீட் தேர்விற்கான பயிற்சி மையம் அமைக்கப்படும். சிறந்த மாணவர்களை உருவாக்க அரசு செயல்படும்.

அனைத்து பள்ளிகளும் வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு டிஜிட்டல் மயமாக்கப்படும். எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும், உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு அரசு செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் 3 ஆயிரம் பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ. 60 லட்சம் செலவில் ஸ்மார்ட்கிளாஸ் அமைக்கப்பட உள்ளது.

9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.486 கோடியில் அனைத்து வகுப்பறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

மத்திய அரசின் மூலம் வரும் ஆண்டில் நிதி அளித்தால், அதனை கொண்ட வருகின்ற ஆண்டில் 10 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த பொதுத் தேர்வாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழக மாணவர்களிடம் இருக்கிறது. தற்போது மாற்றி அமைக்கப்படும் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பினை மாணவர்கள் முடித்து விட்டு செல்லும் போதே அவர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தாயர் செய்யப்பட உள்ளது.

மேலும் புதியப்பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு  கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்துத்தரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை ரவி, சத்தியநாராயணன், பள்ளிகல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.