Home சமையல் வெஜ் சில் மில்

வெஜ் சில் மில்

38
0
SHARE

இந்த காலத்தில் சில குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதே இல்லை என்று பெற்றோர் கவலைப்படுகின்றனர். அப்படிபட்ட குழந்தைகளுக்கு பல காய்கறிகளை ஒன்றாக சேர்த்து அதை புது மாதிரியாக குடுத்தால் அதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியான ஒரு அயிட்டம் தான் இந்த வெஜ் சில் மில்.

தேவையான பொருட்கள்

கோஸ் & 3/4 கப்

கேரட் & 1 சிறியது

குடமிளகாய் & 1 சிறியது

பன்னீர் & 3/ 4கப் தூளாக்கியது

வெங்காயம்& 1

தக்காளி & 3/4 கப்

தனிய பொடி& 1 டீ ஸ்பூன்

சிகப்பு மிளகாய் பொடி& 3/4 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய்& 2/3

முந்திரி & 12/14

கிரீம்& 2/3 டேபிள் ஸ்பூன்

கசூரி மேத்தி &ஒரு சிட்டிகை

கொத்தமல்லி இலை& 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய்& 2 டேபிள் ச்பூன்

ஜீரகம்& சிறிதளவு

செய்முறை

வெங்காயம், கோஸ், கேரட் ஆகியவற்றை மெலியதாக நறுக்கிக்கொள்ளவும்.இதனால் காய்கறிகள் சீக்கிரமாக வேகும். ஒரு வாணலியை எடுத்து அதில் எண்ணெயை விடவும். எண்ணெய் சூடானதும் அதில் ஜீரகம் போடவும் அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும்.

மிக்ஸியில் முந்திரி பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து வழவழைப்பாக அரைத்துக்கொள்ளவும். தக்காளியையும் அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை வதக்கி கொண்டிருக்கும் வாணலியில் தக்காளி விழுதை அரைக்கவும். பச்சை வாடை போகும் வரை அதை வதக்கவும். பிறகு முந்திரி விழுதையும் சேர்க்கவும். இதை நன்றாக கலக்கவும்.

மேற்கொண்டு மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா பொடி, கசூரி மேத்தி பொடி, ஆகியவற்றை சேர்க்கவும் மிதமான தீயில் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கவும். அனைத்து காய்கறிகளையும் ,உப்பையும் சேர்க்கவும் கடைசியாக தூளாக்கியப் பன்னீரை சேர்க்கவும். இப்பொழுது கிரீமை சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான , சத்தான வெஜ் சில் மில் தயார்.