Home சுடச்சுட நெல்லை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்மனைவி, 2 மகள்களுடன் தீக்குளிப்பு தாய், 2 மகள் பரிதாப...

நெல்லை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்மனைவி, 2 மகள்களுடன் தீக்குளிப்பு தாய், 2 மகள் பரிதாப சாவு; கணவர் கவலைக்கிடம்

16
0
SHARE

நெல்லை, அக். 24&

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). கூலித்தொழிலாளி. இவருக்கு சுப்புலெட்சுமி (25) என்ற மனைவியும், மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

மனுவுடன்வந்தார்

இதனால் கொக்கரக்குளத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. இந்த நேரத்தில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். குறை தீர்க்கும் கூட்ட அரங்கத்தில் மனுவுடன் காத்திருந்தார்.

தீக்குளிப்பு

அப்போது திடீரென தயாராக வைத்திருந்த மண்ணெணெய் கே¬னை எடுத்து தனது உடலிலும், மனைவி, குழந்தைகள் உடலிலும் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இந்த காட்சியை போலீசார் பார்த்து வேகமாக ஓடிவந்தனர்.

அதற்குள்அனைவரின்உடலிலும்தீபரவியது. 4 பேரும் வலியால் கத்திக் கதறினர். இதனை கண்ட பொதுமக்கள் செய்வது அறியாது மலைத்துப்போய் அப்படியே உறைந்து நின்றனர்.

ஆஸ்பத்திரியில்

அனுமதி

உடனடியாக, போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.4 பேரும் மண்ணில் விழுந்தனர். உடல் முழுவதும் கருகிய  நிலையில் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய், 2 மகள்கள் பலி

இதில் சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமியும் அவரது மகள்கள் மதிசாருண்யாவும், அக்சயாபரணிகாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இசக்கிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கந்துவட்டி கொடுமை

போலீசார் நடத்திய விசாரணையில், இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, காசிதர்மம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கியதும், அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளதும், கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.

சகோதரர் பேட்டி

இந்த சம்பவம் குறித்து  இசக்கி முத்துவின் சகோதரர் கோபி தெரிவிக்கையில், என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி. அலுவலகத்துக்கு  மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. போலீசார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், காயமடைந்த அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணமான குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தீக்குளிப்பு தொடர்பாக முத்துலட்சுமி, அவரது கணவர்,மாமனார் காளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர் மனைவி மற்றும் தனது 2 மகள்களுடன் தீக்குளித்தார்.4 பேரும் உடல் கருகியநிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தாயும், 2 மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். கணவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here