Home தமிழகம் பேரறிவாளனுக்கு பரோலை நீட்டிக்க வேண்டும்இ.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பேரறிவாளனுக்கு பரோலை நீட்டிக்க வேண்டும்இ.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

14
0
SHARE

சென்னை, அக். 24&

பேரறிவாளனுக்கு பரோலை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வருக்கு இ.கம்யூனிட்ஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அனுப்பியுள்ள கடிதத்தில், பேரறிவாளனுக்கு இருமாத காலம் பரோல் அளித்து இன்றுடன் முடிவடைகின்றது.

பேரறிவாளன் தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். இந்நிலையில் பேரறிவாளன் தந்தைக்கு உதவி செய்திட வசதியாக அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் தங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். அற்புதம் அம்மா  கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கச் செய்திட தாங்கள் உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

பரோல் முடிவடைவதால் இப்பிரச்சனையை அவசர பிரச்சனையாகக் கருதி நல்லதொரு முடிவை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.