Home சுடச்சுட போலி ரேசன்கார்டு, சான்றிதழ்கள்: தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க தந்தை உரிமை கோருபவர் புகார்

போலி ரேசன்கார்டு, சான்றிதழ்கள்: தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க தந்தை உரிமை கோருபவர் புகார்

17
0
SHARE

மதுரை, அக். 24&

போலி ரேசன்கார்டு, சான்றிதழ்களை நடிகர் தனுஷ் தாக்கல் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கைஎ டுக்க வேண்டும் என்றும் தந்தை உரிமை கோருபவர் தனுஷ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களுடைய மூத்த மகன் என்றும் தங்களுக்கு வயதாகி விட்டதால் மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக தனுஷ் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது நடிகர் தனுஷ் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பல கட்ட விசாரணைக்கு பிறகு மேலூர் கோர்ட்டில் உள்ள தனுஷ் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து நடிகர் தனுஷ் ஐகோர்ட்டை தவறாக வழிநடத்துவதாக கதிரேசன் ஐகோர்ட்டு பதிவாளருக்கு புகார் மனு அனுப்பினார்.ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் கதிரேசன் கடந்த 5&ந் தேதி மதுரை புதூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை கதிரேசன் தனது வக்கீல்களுடன் வந்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:&நடிகர் தனுஷ் எனது மகன் என்பதை நிரூபிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

மேலூர் நீதிமன்றத்தில்  நான் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியானவை.

இதன் மூலம் ஐகோர்ட்டை தவறாக வழிநடத்தியுள்ளார்.இந்த ஆவணங்கள் அடிப்படையில் தனுஷ் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவேபோலிஆவணங்களைதாக்கல்செய்ததுதொடர்பாகஉரியவிசாரணைநடத்திநடிகர்தனுஷ்மீதுமோசடிவழக்கில்நடவடிக்கைஎடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.