Home தமிழகம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கழிவுநீரைதெருக்களில்விட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் கழிவுநீரைதெருக்களில்விட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை

11
0
SHARE

பொன்னேரி, அக். 24&

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் குடியிருப்போர் கழிவுநீரை தெருக்களில் விடுவதால், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுவதைத் தடுக்க அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்திரவிட்டுள்ளார்.

பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் திருவேங்கிடாபுரம் உட்பட 8&க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 10,000&ம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில்திருவேங்கிடாபுரத்தில்குடியிருக்கும்மக்கள்தங்கள்வீடுகளில்கழிவுநீரைதெருக்களில்விட்டுஅசுத்தப்படுத்திவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுற்றுபுற சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்திரவின்பேரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏ.டி.எஸ் கொசுப் புழுக்கள் தேங்கி நிற்கும் நீரில் உற்பத்தியாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கழிவுநீரை தெருக்களில் விடக்கூடாது என குடியிருப்போருக்கு தடப்பெரும்பாக்கம் ஊராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்துகுடியிருப்போர்கழிவுநீரைதொடர்ந்துதெருக்களில்விடப்படுவதால்சுற்றுப்புறத்தூய்மைபாதிக்கப்படுவதுகுறித்துதகவலறிந்தபொன்னேரிகோட்டாட்சியர்முத்துசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று சுகாதாரப் பணியினை மேற்கொண்டனர். அப்போது கழிவுநீர் தெருக்களில் விடப்படுவது தெரிந்தது.

மேலும், சாலைகளின் ஓரத்தில் கழிவு நீருடன் குப்பைகள் குவிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுவதை அறிந்த அதிகாரிகள் இச்செயலில் ஈடுபட்டவர்கள் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன் அபராதத்துடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனையடுத்து கழிவுநீருடன் உள்ள குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.