Home சினிமா அரசியல்வாதிக்கு விஷால் சூடு

அரசியல்வாதிக்கு விஷால் சூடு

11
0
SHARE

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தைப் பற்றி பா... தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருவது குறித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டடார். அதில் ‘‘ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில்நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டப்பூர்வமாகவே ஆக்கிவிட்டனவா அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள்? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜாவுக்குமக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் உள்ள எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”  இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.