Home அரசியல் துறையூர் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ‘இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ எம்.பி. ரத்தினவேல்...

துறையூர் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ‘இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ எம்.பி. ரத்தினவேல் நம்பிக்கை

16
0
SHARE

துறையூர், அக். 23&

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என துறையூரில் நடைபெற்ற அ.தி.மு.. பொதுக்கூட்டத்தில், எம்.பி. ரத்தினவேல் நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

திருச்சிமாவட்டம், துறையூர் பாலக்கரை எம்.ஜி.ஆர் திடலில் புற நகர் மாவட்ட அ.தி.மு.. நகர சார்பில் 46ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் செக்கர் ஜெயராமன் தலைமை வகித்தார்.

முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன்.காமராஜ், நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சரவணன், எஸ்.கே.பி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், அழகாபுரி செல்வராஜ் வரவேற்றனர். புறநகர் மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யுமான ரத்தினவேல் கலந்து கொண்டு பேசுகையில், .தி.மு.. ஒரு எஃகு கோட்டை. இந்த இயக்கத்தை வீழ்த்த இன்னும் யாரும் பிறக்கவில்லை. இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என்று தினகரன் கூறினார், ஆனால் தற்போது அவரை நம்பிய 18 பேர்கள் தான் வீட்டுக்கு சென்றுள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இருந்து விரைவில் நல்ல தகவல் வரும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் நகர செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், அரசு வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்ட அ.தி.மு.. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூக்கடை சாமிநாதன் நன்றி கூறினார்.