Home அரசியல் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்த உயர்நீதிமன்றமே உத்திரவிட்டது:  ஓ.பி.எஸ்.

தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்த உயர்நீதிமன்றமே உத்திரவிட்டது:  ஓ.பி.எஸ்.

14
0
SHARE

பொன்னேரி, அக். 23&

உள்ளாட்சி தேர்தலில் இந்தியாவிலேயே முதன்முறையாக மறுதேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் 46ஆம் ஆண்டு துவக்க விழாவும் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைப்பெற்றன. இந்தக் கூட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை ஆற்றினார்.

தமிழக அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாப் பேரூரை ஆற்றினார். அவர் பேசுகையில், பேரறிஞர் அண்ணாவின் நம்பிக்கை நாயகனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். இவர் நாடகங்கள் மற்றும் சினிமாவில் நடித்து புகழ்பெற்று விளங்கிய நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பாடுபட்டார். அண்ணா மறைவுக்கு பின் அ.தி.மு.க உருவாக கருணாநிதிதான் காரணமாக இருந்தார். கருணாநிதி தி.மு.கவை கபளிகரம் செய்து ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்ததை எதிர்த்துதான் 1972&ல் அ.தி.மு.கவை எம்ஜிஆர் தொடங்கி 1977&ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மக்கள்சக்திமூலம் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தொடர்ந்து ஆட்சியை அமைத்து முதல்வராக இருந்தபோது, அவரது மறைவிற்கு பின் ஜெயலலிதா நிரந்தர பொது செயலாளராக 27ஆண்டுகள் இருந்து வந்தார்.

17 லட்ச உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு..வை எம்ஜிஆர் உருவாக்கியதை ஜெயலலிதா 1.50 கோடி உறுப்பினர்களாக, மக்கள் இயக்கமாக மாற்றி சாதனை படைத்து கட்டுகோப்புடன் கட்சியை நடத்தி வந்தார். இவரது மறைவிற்கு பின் ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் செல்ல கூடாது என்பதற்காக இந்த இயக்கம் காப்பற்றப்பட்டு மீண்டும் இணைந்துள்ளோம். 2016&ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வருவதற்கு ஸ்டாலின் பலவிதமான மாறு வேடத்தில் நடித்தார்.

சைக்கிள், மோட்டார் சைக்கிள், டிராக்டர் ஒட்டி மக்களைக் கவர நினைத்தார்.

அவரது எண்ணம் ஈடேறவில்லை அம்மாமீது மக்கள் வைத்திருந்த அன்பு, பாசம், பற்று காரணமாகவே மீண்டும் ஆட்சியை அமைத்தார்.

32 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்தார். 2006&2011 ல் தி.மு.க ஆட்சி செய்த போது நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அராஜகங்கள் மற்றும் அக்கிரமங்கள் காரணமாக இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என தி.மு.கவிற்கு மக்கள் முற்றுபுள்ளி வைத்தனர்.

ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை ஒரு வாரம், ஒரு மாதத்திற்கு கூட சொல்லலாம். தொழில் முனைவோர் மாநாடு நடத்தியதில் 40 திட்டங்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்துள்ளதால் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஜெயலலிதாவின் திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

கல்விக்காக 26,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் முறைகேடுகள் செய்ததாக தொடர்ந்த வழக்கில் சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றமே உத்திரவிட்டது. முதன்முதலாக முறைகேடுகளுக்காக மறு தேர்தல் நடத்தப்பட்டது அப்போதுதா. இதுபோல், தி.மு.க காவேரி, முல்லை பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டாமல் கருணாநிதி ஒதுங்கினார்.

காரணம் அந்த மாநில சொத்துக்கள் பறிபோகும் என்பதை உணர்ந்துதான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மேலும், வரும் 23, 24 தேதிகளில் நமக்கு இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தின் மூலம் கிடைக்கும். வரும் தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என பேசினார்.

இவ்விழாவில், திருவள்ளூர் எம்.பி. டாக்டர் வேணுகோபால், அம்பத்தூர் எம்.எல்.. அலெக்சாண்டர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பானுபிரசாத், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் செங்கை சேகர், கூட்டுறவு சங்க இயக்குநரும், பொதுக்குழு உறுப்பினருமான பொன்னுதுரை, பேரவைச் செயலாளர் வக்கீல் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கானஏற்பாடுகளைதிருவள்ளூர்மேற்குமாவட்டசெயலாரும்பொன்னேரிஎம்.எல்.ஏவுமான சிறுணியம் பலராமன் செய்திருந்தார்.