Home தலையங்கம் ஆட்கள் இல்லாமல் தள்ளாடும் பஸ் போக்குவரத்துக் கழகம் 

ஆட்கள் இல்லாமல் தள்ளாடும் பஸ் போக்குவரத்துக் கழகம் 

36
0
SHARE

கடல்வழிப்போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, தரை வழிப்போக்குவரத்து என்று உலகில் மூன்று வழிப்போக்குவரத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்துவது தரை வழி போக்குவரத்தைத்தான். ரயிலுக்கு அடுத்தபடியாக மக்கள் நம்பியிருப்பது பேருந்துகளைத்தான். தமிழகத்தில் போக்குவரத்துக்கழகங்கள் பல கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை அரசு போக்குவரத்துக்கழகம், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் ஆகியவை ஆகும்.

இவற்றில் மொத்தம் 1,185 பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 6,800 பணியிடங்களில் 5,000 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன.

1,560 ஓட்டுனர் பணியிடங்களும், 235 நடத்துனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆள் பற்றாக்குறை காரணமாக இது சாத்தியமற்றதாக மாறுகிறது. இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வழங்கப்படும் அதிக பணிச்சுமையை தட்டிக் கேட்கும் ஊழியர்களின் வருகைப் பதிவை குறைப்பது மட்டும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓய்வில்லா பணியில் ஈடுபடும் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகங்களை நம்பியே சில பயணிகள் வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றுவரும் நிலையில் பேருந்து ஓட்டுனர்களுக்கு சரியான ஓய்வு அளிக்காததால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை மக்கள் தவிர்க்கும் மனப்போக்குக்கு வந்துவிட்டனர். இதனால் தனியார் பேருந்துகளை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலை ஏற்படுகிறது.

அரசுபோக்குவரத்துக்கழகத்தின்இந்தஅலட்சியப்போக்கினால்வருவாய்இழப்பும்ஏற்படுகிறது. ஆனால் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் செல்வதாக மட்டும் அதிகாரிகள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? இதுபோன்ற வார்த்தைகளை விட்டொழித்துவிட்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி போக்குவரத்து வருவாயை பெருக்கலாமே…?