Home சிறப்புச் செய்திகள் உயிர் காக்கும்     காய்கறிகள்

உயிர் காக்கும்     காய்கறிகள்

186
0
SHARE

வெங்காயத்தில் உள்ள இதயத்தைக்காக்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள் ரத்தம் உறைவதைத்தருக்கிறது. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. ரத்த அழத்தத்தைக் குறைக்கிறது. ட்ரைகிளிசராய்ட்ஸ்&ன் அளவையும் குறைக்கிறது. இதய நோயாளி, மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன் தரக்கூடியது. தினசரி ஒரு கப் வெங்காயம் சாப்பிடுவதோ உங்கள் ஆரேக்கியத்துக்கான சிறந்த முதலீடாக இருக்கும்

வாழைப்பூ:

நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும் பூ, வாழைப்பூ ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய பூ இது. வைட்டமின் பி சத்து நிறைந்தது. இன்சுலினைச்சுரக்க செய்யும் காரணியாக வாழைப் பூ விளங்குகிறது. கனையம் வலுப்பெறும். சர்க்கரை நோயும் கட்டுப்படும். ரத்த மூலத்தை தடுக்கும் வயிற்றுக்கடுப்பை போக்கும் மாதவிலக்கு காலங்களில் பெண்களின் அதிக உதிரப் போக்கை கட்டுப்படுத்தும். வாழைப்பூவை ரசம் செய்து அருத்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். வரட்டு இருமல் தடுக்கும் கை,கால் எரிச்சலுக்கு அந்த பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் தாது விருத்தி அடையும் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆண், பெண் மலட்டுத் தன்னையை போக்கும்.

பாகற்காய்:

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக்கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. பாலிபெப்டைடுபி எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் இன்சுலின் என்று கருதுகிறார்கள்.

ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். சர்க்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் டைப்&2 நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது. பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது 100கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கர்ப்பினிகளுக்கு கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்சிபாகற்காயில் மிகுதியாக உள்ளது.

பீட்டா கரோட்டின். ஆல்பா கரோடின், லுடின், ஸி&சாந்தின், வைட்டமி& ஆகியவை சிறந்த அளவில் உள்ளது. புற்றுநோயை உருவாக்கும் பீரி ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது முப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு.

மலச்சிக்கலை குணப்படுத்தும். வைட்டமின்&பி3, வைட்டமின்&பி5, வைட்டமின்&பி6, போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னிசியம் போன்ற முக்கியத்தாதுக்களும்பாகற்காயில் உள்ளது. அதனை உண்பதால் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது. பாகற்காய் எச்..வி.க்கு எதிரான நோய்த் தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. அந்த புழுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். பித்தத்தை தணிக்கும். தாய்ப்பால் சுரக்க உதவும். பாகற்காய் சாறு மஞ்சள் காமாலையைப் போக்கும். ஓர் அவுன்ஸ் பாகற்காய் இலைச்சாறுடன் சம அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். சிறுநீரகக் கற்களுக்கும் ஜுரத்திற்கும், குடல்புண், வாயுத்தொல்லைகளுக்கும் கல்லீரல் பாதிப்புகளுக்கும் பாகல் உதவுகிறது. பாகல்பழம் சத்து அளிக்கிறது. மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளரிக்காய்:&

இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன் வெள்ளரிக்காய் தோன்றியது. கோடைக் காலத்தில் தாராளமாகக் கிடைக்கும் வெள்ளரி, பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றதாகும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியை உடலுக்குத் தரும். சிறுநீரை பெருக்கும். குடல்புண்ணை ஆற்றும். மலச்சிக்கலை தீர்க்கும். பித்தத்தை குணப்படுத்தக் கூடியது. வைட்டமின் பி, சி நிறைய உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெள்ளரி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருந்தாகவும் விளங்குகிறது.

புடலங்காய்:&

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெப்பமண்டல பயிராகும். இதில் வைட்டமின் சத்து அதிகமுள்ளது. சூடான உடம்பை குளிர்ச்சி அடைய வைக்கும். அதனால் சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் அது. வாதநோய், கபம், பித்தத்தை போக்கும். குளிர்ச்சியான உடம்புடையவர்க்கு புடலங்காய் ஒத்து வராது. ஜலதோஷ நேரங்களில் தவிர்ப்பது நல்லது. தாதுவிருத்தி செய்யும்.

அவரைக்காய்:&

உடலுக்கு நன்மை தரும் காய்கறிப் பயிர்களில் ஒன்று அவரை. இதில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கண்வலி, கண்குத்து, கண் அரிப்பு போன்ற கோளாறுகளை குணப்படுத்த வல்லது. குடல், நரம்புகள் வலுப்பெறும்.

இதை சமைத்து உண்டால் உடம்பை வலுவாக்கும். காம உணர்ச்சியை அதிகரிக்கும். சூடான தேகம் கொண்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஆண்மை பலம் பெருகும். அவரைக்காய் ரத்தசோகை, உடல் இளைப்பு, மூட்டுவலி போன்றவற்றை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

மேற்கூறிய காய்கறிவகைகளை நாம் அரிதாகத் தான் பயன்படுத்துகிறோம். இதை அடிக்கடி உணவில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பெற்றிடுவோம். நோயின்றி வாழ்வோம்.