Home சினிமா 90 வயது வரை நடிப்பேன்நடிகை ஆலியா பட் பளிச்

90 வயது வரை நடிப்பேன்நடிகை ஆலியா பட் பளிச்

16
0
SHARE

தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால், 90 வயது வரை நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறி உள்ளார்.

இந்திய சினிமாவில் நீண்ட காலமாக உள்ள சர்ச்சை ஹீரோக்கள் மட்டும் வயதானாலும் இளம் ஹிரோயின்களுடன் டூயட் பாடுகிறார்கள் என்பதுதான். நடிகைகள் சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகிறார்கள்.

அவர்களுக்கு ஏற்ற கதையை யாரும் எடுப்பதில்லை என்ற

குரலை இப்போது எழுப்பியிருக்கிறார் பாலிவுட் ஹிரோயின் ஆலியா பட்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆண்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளை தயார் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும்.

அதன்பிறகு ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். நடிகைகளுக்காக வித்தியாசமான கதைகளை தயாரிப்பது இல்லை. வித்தியாசமான முயற்சிகளை நமது இயக்குனர்கள் செய்வதும் இல்லை.

இதனால் நடிகைகள் ஒரு சில ஆண்டுகளிலேயே

சினிமாவில் இருந்து விலக வேண்டியது இருக்கிறது. எனக்கு

மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் 90 வயதுவரை நடிப்பேன்என்றார்.