Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

10
0
SHARE

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேத்ரீன் மிடில்டன் தம்பதிக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3&வது குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

* ஈரானில் பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என .நா. மனித உரிமைகள் ஆணையம் அந்நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளது.

* அமெரிக்கா, வடகொரியா இடையிலான பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து உள்ளார்.

* பனாமா கேட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப், அவரின் மகள் மற்றும் மருமகன் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதில் 3&வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

* விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டுஏர் பெர்லின்விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.