Home தலையங்கம் தடுப்பணை கட்டாததால் வீணாகும் தண்ணீர்

தடுப்பணை கட்டாததால் வீணாகும் தண்ணீர்

6
0
SHARE

தமிழகத்தில் ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையை சேமித்தாலே போதும். நமக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் நாம் இதுவிஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறோம்ஆண்டுதோறும் தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்துவதும், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்று சட்டரீதியாக கர்நாடகாவிடமிருந்து எப்படி தண்ணீர் பெறலாம் என்றும் போராடி வருகிறோம்.

மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் எங்கெங்கு வேண்டும் என்று ஆராய்ந்து ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி மழை நீரை சேமித்தாலே போதும் நாட்டில் 90 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து விடலாம்மேலும் ஆறு, ஏரி, குளம், குட்டைகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டதால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

இப்போது ஆந்திர மாநிலத்திலும், வேலூரிலும் பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின்பு 2015&ம் ஆண்டில்தான் பாலாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், மகிழ்ச்சியைவிட சோகமே அவர்களிடம் அதிகமாக உள்ளது.

காரணம் இந்த பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டிருந்தால் அதில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தியிருக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே சுமார் 60 கிலோமீட்டர் தூரத்துக்கு பாலாறு ஓடுகிறது. இதில் தடுப்பணை கட்டினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

இனி வரும் ஆண்டுகளிலாவது பாலாற்றில் தடுப்பணை கட்டினால் காஞ்சிபுரம் மாவட்டமே வளம் பெறும். இதுபோல் தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து உடனடியாக தடுப்பணைகளை கட்டி நீரை சேமித்தால் தமிழகம் சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுத்து தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிபார்ப்புமட்டுமல்ல, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.