Home தமிழகம் ஊருக்கு மட்டும் உபதேசம், துறைக்கு இல்லையா பள்ளி கல்வித்துறை வளாகத்தில் டெங்கு பரவும் அபாயம்  முதல்வரின்...

ஊருக்கு மட்டும் உபதேசம், துறைக்கு இல்லையா பள்ளி கல்வித்துறை வளாகத்தில் டெங்கு பரவும் அபாயம்  முதல்வரின் தனிப்பிரிவில் மனு 

5
0
SHARE

 சென்னை, அக்.20& பள்ளிகல்வித்துறை வளாத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்த வாகனம் கிடப்பதால் டெங்குவை உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை  இயக்குநரின் செயல்முறைகளில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடித்தத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு 27.9.2017 அன்று சென்னையில் நடைபெற்றதுஇக்கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு  டெங்கு காய்ச்சல் நோய் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுரைகளை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் சேர்க்கும் வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடவும், அவர்களின் செயல்பாட்டினை கண்காணித்து டெங்கு ஒழிப்பிணை ஒரு இயக்கமாக செயல்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறதுபள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கியிருப்பின் உடனடியாக தேங்கிய நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர்பானை மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படும் என்பதை அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட ஏதுவாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வடிகால்கள், பள்ளி கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருட்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணித்து, தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்க வேண்டும்.

இது போன்ற அறிவுரைகளை வழங்கி உள்ளார். பல்வேறு பள்ளிகளுக்கு உபதேசம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை தனது அலுவகத்தினை பாராமரிப்பதற்கு ஒரு உதாரணம் தற்பொழுது வெளிவந்துள்ளதுஆனால் பள்ளிகல்வித்துறை அலுவலகம் செயல்படும் வளாத்தில் உள்ள நிலையை உணர்ந்த கலை ஆசிரியர் நல சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் டெங்குவை ஒழிக்க கூறும் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாத்திலேயே டெங்கு உற்பத்தி செய்யும் வகையில் பழுதடைந்த வாகனம், புதார்கள் இருப்பது போன்றவற்றை சுட்டிக் காட்டி முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடந்த 7 ந் தேதி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், பல அறிஞர் பெருமக்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகமாகிய டி.பி.. வாளாகம் குப்பை கூளங்கள் நிறைந்த இடமாக மாறி வருவது வருத்தம் அளிக்கிறது. பழுதடைந்த வாகனங்கள், அதன் மேல் செடிக் கொடிகள் நெகிழி நிறைந்த வளாகம். அதன் அலங்கரிப்பை அசிங்கப்படுத்துகிறது. தொடர் மழைகாலாமாக இருப்பதால் பாம்புகள், விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக டி.பி.. வளாகம் திகழ்கிறது. இந்த டி.பி.. வளாகத்தினை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உரியத்துறைக்கு பரிந்துரை செய்து முழு சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்

இந்த மனுவிற்கு முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அவருக்கு அனுப்பி உள்ள பதிலில்,  தங்களின் மனு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையருக்கு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளதுபள்ளிக்கல்வித்துறையின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டி பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளதுஆனால் அவர் தனது அலுவலகத்திற்கு முன்புறமும், பக்கவாட்டிலும் மட்டும் அழகாக பூங்காக்களை அமைத்து வருகிறார். பிற பகுதிகளை கண்டுக் கொள்ளலாம் உள்ளார். அங்கு பல்வேறு பணிகளின் காரணமாக வரும் ஆசிரியர்களுக்கு டெங்குவிற்கு காரணமான கொசுக் கடித்தால் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுரை கூறும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தனது வாளத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என கலை ஆசிரியர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.