Home இந்தியா ஜனாதிபதி தேர்தலின் போது சோனியாவின்பேச்சைமீறி பால் தாக்கரேவை சந்தித்தது ஏன்?முன்னாள் ஜனாதிபதி பிரணாப்...

ஜனாதிபதி தேர்தலின் போது சோனியாவின்பேச்சைமீறி பால் தாக்கரேவை சந்தித்தது ஏன்?முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விளக்கம்

19
0
SHARE

புதுடெல்லி, அக். 18&

ஜனாதிபதி தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர், சோனியாவின் விருப்பத்தை மீறி, சிவசேனா தலைவர், பால் தாக்கரேயை சந்தித்தது குறித்து, தன் புதிய புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த, 2012 முதல், இந்தாண்டு ஜூலை வரை, ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி, ‘கூட்டணி காலம்என்ற பெயரில், தன் அரசியல் அனுபவங்களை புத்தகமாக தொகுத்துள்ளார்.

அதில்அவர்கூறியுள்ளதாவது:

ஜனாதிபதிதேர்தலில்நிறுத்தப்பட்டநான், 2012 ஜூலை, 13ல், மும்பைக்கு பிரசாரத்துக்காக சென்றபோது, சிவசேனா தலைவர், பால் தாக்கரேயை சந்தித்தேன். பா.., தலைமையிலான,  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த போதும், தாக்கரே எனக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவாரின் முயற்சியால், தாக்கரே எனக்கு ஆதரவு தெரிவித்துஇருந்தார்.

மும்பைக்குசெல்வதற்குமுன், தாக்கரேயை சந்திப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர், சோனியா மற்றும் சரத் பவாரிடம் ஆலோசனை செய்தேன்.

சந்திப்பதைதவிர்க்கும்படிசோனியாகூறினார். ஆனால், ‘சந்திக்காவிட்டால் தாக்கரேவுக்கு அதிருப்தி ஏற்படும்என, பவார் கூறினார். தாக்கரே உடனான சந்திப்பு, சோனியாவுக்கு  அதிருப்தியை ஏற்படுத்தியதை தெரிந்து கொண்டேன். ஆனால், அது குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.

மம்தாபானர்ஜிதலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ், .மு., கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் மேலும் இரண்டாண்டுகள் இருந்தன.

அந்தநேரத்தில், தாக்கரேவின் ஆதரவைப் பெற்றுத் தந்த, சரத் பவாரையும் இழக்க விரும்பவில்லை.

பா.., கூட்டணியில் இருந்த போதும், எனக்கு ஆதரவு தந்த தாக்கரேயை சந்திப்பது தான் மரியாதையாக இருக்கும். இவ்வாறு பல்வேறு கோணங்களில் யோசித்தே, பால் தாக்கரேயை சந்தித்தேன்.

அந்தசந்திப்புக்குப்பின், சரத் பவார் என்னுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். ‘வங்கப் புலியை, மராத்தா புலி ஆதரிப்பது இயற்கையானதுஎன, பவார் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். ஒரு சந்திப்பால், பல பலன்களை பெற்றோம்.

இவ்வாறுபுத்தகத்தில், பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.