Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

16
0
SHARE

இந்த தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடுங்கள். அயோத்தி நகர் முழுக்க தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கட்டும். அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்படும் போதும் இதுபோன்ற பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடக்க வேண்டும்.

& உத்தரப் பிரதேச முதல்வர்

யோகி ஆதித்தியநாத்.டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், ஒப்பந்த ஊழியர்களை 24 மணி நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் ஆக்கி விடுவேன். 90 சதவீத ஆட்சியர்கள் (..எஸ். அதிகாரிகள்) தங்கள் பணியை சரிவர செய்வதில்லை. கோப்புகளை கிடப்பில் போட்டு விடுகின்றனர்.

& டெல்லி முதல்வர்

அரவிந்த் கெஜ்ரிவால்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் முகலாசரி ரெயில் நிலையம் பெயரை பண்டிட் தீனதயாள் என மாற்றி உள்ளனர். தேவைப்பட்டால் தாஜ்மகாலின் பெயரை கூட மாற்றி விடுவார்கள். அது மட்டும் அல்ல, இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

& மேற்கு வங்க முதல்வர்,

மம்தா பானர்ஜி.குஜராத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின்கீழ் ஒவ்வொரு விவசாயியும் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் மாநில அரசின் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

& குஜராத் முதல்வர், விஜய் ரூபானி