Home தமிழகம் தீபாவளிசிறப்புபேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

தீபாவளிசிறப்புபேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

21
0
SHARE

சென்னை, அக். 18

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு வரை நேரில் ஆய்வு செய்தார்.

தீபாவளிதிருநாளைமுன்னிட்டுபொதுமக்கள்சிரமமின்றிசொந்தஊர்களுக்குபயணம்செய்யும்வகையில்சிறப்புப்பேருந்துகள்இயக்கப்படுகின்றன. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவு வரை ஆய்வு செய்தார். ஆய்வின்போது முன்பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருந்ததால் அனைத்து பயணிகளும் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வசதியாக கூடுதலாக தேவையான அளவு பேருந்துகளை இயக்குவதை கண்காணித்தார்.  போக்குவரத்து நெரிசல் இருந்த பகுதிகளில் போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டார்.

பேருந்துக்காக காத்திருந்த அனைவரும் பயணம் மேற்கொள்ள தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு, பயணிகள் சிரமமின்றி பாதுகாப்பாக பயணம் செய்வதை நேரடியாக பார்வையிட்டார். அப்பொழுது அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனந்த பத்மநாபன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

17.10.2017 அன்று மாநகர போக்குவரத்துக் கழகம் அண்ணாநகர் (மேற்கு) பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு 240 பேருந்துகளும்,  சைதாப்பேட்டை நீதிமன்றம் பேருந்துநிறுத்தத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை  வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்ல 194 பேருந்துகளும், தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல 230 பேருந்துகளும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி வழியாக வேலூர், ஆற்காடு, தர்மபுரி, ஓசூர் செல்ல 525 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம்,  திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பண்ருட்டி, நெய்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூர் மற்றும்  இதர வழித்தடங்களில் 3274 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி 2966 பேருந்துகள் இயக்கப்பட்டு, ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டு ஆயிரம் பயணிகளும், 16ம் தேதி 3812 பேருந்துகள் இயக்கப்பட்டு, ஒரு இலட்சத்து எண்பத்தெட்டாயிரம் பயணிகளும், 17ம் தேதி 2,275 பேருந்துகளுடன் 2,188 சிறப்பு பேருந்துகள், என மொத்தம் 4,463 பேருந்துகள் இயக்கப்பட்டு சென்னையில் இருந்து பயணிகள் சென்றுள்ளனர்

மேலும், இது வரையில் தமிழகம் முழுவதிலும் இருந்து 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைன்¢ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

அதில் 84,349பேர் ரிட்டேன் டிக்கெட்டாக முன்பதிவு செய்துள்ளனர்.  இதன் மூலம் நேற்று மட்டும் போக்குவரத்துத்துறைக்கு ரூ.7.72கோடி வருவாய் வந்துள்ளதாக தமிழக போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.