Home தலையங்கம் சார்பதிவு அலுவலகங்களில் தலை விரித்தாடும் லஞ்சம்…!

சார்பதிவு அலுவலகங்களில் தலை விரித்தாடும் லஞ்சம்…!

5
0
SHARE

தமிழகம் முழுவதும் 578சார்பதிவு அலுவலகங்கள் உள்ளது. இதில் வீடு, விளை நிலம் உள்பட பல்வேறு சொத்து பரிமாற்றங்கள்  பதிவு செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும், வீடு, விளை நிலம் தொடர்பாக 30 லட்சம்ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்று ஆவணங்களை பதிவுசெய்ய சார்பதிவு அலுவலகங்களில் உள்ளவர்கள் பொதுமக்களிடம் வெளிப்படையாகவே லஞ்சம் கேட்பதாக பல்வேறு புகார்கள்எழுந்துள்ளது.

ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணம்நிர்ணயித்து லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிகிறது. உதாரணமாக ரூ.50 லட்சம்மதிப்பில் உள்ள ஆவணங்களுக்கு ரூ.15 ஆயிரமும், திருமண பதிவுக்கு ரூ.3 ஆயிரமும், சங்க பதிவுக்கு ரூ.1,500&ம்சிட்பண்ட் பதிவுக்கு ரூ.5 ஆயிரமும் லஞ்சமாக கேட்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சுமார் 225க்கும் மேற்பட்டசார்பதிவு அலுவலகங்கள் மீது இத்தகைய புகார்கள் அதிகமாக எழுந்துள்ளன.இதனை தொடர்ந்து சமீபத்தில்லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருவாரூர், தஞ்சாவூர், சைதாப்பேட்டை, ஒத்தக்கடை ஆகிய இணை சார் பதிவு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணத்தை லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.இத்தகைய சோதனை 4 ஆண்டுகளுக்குபின்பு இப்போதுதான் நடந்துள்ளது.

இதுவரை சோதனை எதுவும் இல்லாமல் இப்போது திடீரென்று சோதனை நடத்தியதுசார்பதிவு அலுவலக ஊழியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள எல்லா சார்பதிவு அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இன்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பளத்தை வாரி வழங்கிஉள்ளது.

இவர்களுக்குசம்பளத்தைஉயர்த்தவேண்டியேமதுபாட்டில்களின்விலையைஉயர்த்திவிட்டதாககுடிமகன்கள்புலம்பிவருகின்றனர்.இந்த நிலையில் விலைவாசி உயர்வாலும், மற்றும் பல்வேறு பிரச்சினைகளாலும் ஏற்கனவே விழி பிதுங்கி கிடக்கும் ஏழை, நடுத்தர மக்களை வாட்டிவதைக்கும் வகையில் வாங்கப்படும் லஞ்சத்தை அவர்களாகவேகைவிட்டு திருந்தவேண்டும்.

அப்படியும் திருந்தாவிட்டால் தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் சேர்ந்து அதிரடி நடவடிக்கைஎடுத்து லஞ்ச அரக்கர்களிடமிருந்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.