Home சுடச்சுட டெங்கு விழிப்புணர்வுக்கு களம் இறங்காத ரசிகர்கள் சுட்டு விரலைக் கூட அசைக்காத நடிகர்கள்

டெங்கு விழிப்புணர்வுக்கு களம் இறங்காத ரசிகர்கள் சுட்டு விரலைக் கூட அசைக்காத நடிகர்கள்

38
0
SHARE

கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவும் , கொடி தோரணம் கட்டுவதற்கும் தான் ரசிகர்களா? ஏன் நல்ல காரியத்திற்கும், டெங்கு போன்ற நோயில் இருந்து, விழிப்புணர்வு ஏற்படுத்திட, அவர்களுக்கு கட்டளையிடவும், தூண்டி விடவும் பெரிய நடிகர்கள் சுட்டு விரலை கூட அசைக்காதது ஏன் என கேள்விகள் வானம் வரை நீள்கிறது.

தமிழகம் முழுவதும், டெங்கு என்ற உயிர் பறிக்கும் கொடிய நோயில், நாளுக்கு, நான்கு பேராவது செத்து மடிகின்றனர். எதிர் கட்சிகள் , டெங்கு இறப்பு,   நாற்பது ஆயிரம் என்கின்றனர். இல்லை. இல்லை. வெறும் நாற்பது தான் என்கிறது தமிழக அரசு.. சுத்தமான தண்ணீரை தேடி தான், ஏடிஎஸ் வகை கொசுக்கள் சென்று, அதில் முட்டையிட்டு, தன் இனத்தை விருத்தி செய்கிறது.

அந்த கொசுக்களை ஒழிக்க, நம்மால் தான் முடியும் என்ற விழிப்புணர்வு தற்போது பலமாகவே பிரயோகிக்கப்படுகிறது. தமிழக அரசு, பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து தான் வருகிறது. ஆனால், சிலர் டெங்கு இறப்பை வைத்து, பலமாகவே அரசியல் செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல்,  தற்போது, நடிகர்கள் பலருக்கு முதல்வர் ஆசை துளிர் விட்டுள்ளது என்பதைவிட அது விருட்சமாகி நிற்கிறது என்பதுதான் நிதர்சனம். சந்தையில் விற்கும் காய்கறி  போல், எடைபோட்டு, பிரச்சாரம் என்ற பெயரில் சிங்க நடைப்போட்டு, முதல்வர் பதவியை வாங்கி விடலாம் என நினைக்கின்றனர்.

பல விதமான கருத்துக்களை ,அரசுக்கு எதிராக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் நடிகர் கமலஹாசன் , இன்று வரை ,தனது ரசிகர்களை, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வில் இறங்குங்கள் என அறிக்கை விடாதது ஏன் என  சமூக ஆர்வலர்கள் தங்களின் கேள்விகளை முன் வைக்கின்றனர்.

அன்பு வேண்டுகோளாவது வைக்கலாமே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தனக்கு  கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர் என பிதற்றும் நடிகர்கள் பலர், தங்களுடைய ரசிகர்களை நல்ல காரியத்திற்கு தூண்டி விடலாமே  ?  நடிகர்களின் பிறந்த நாளுக்கு மட்டும்தான், ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? நதிநீர் இணைப்புக்கு, ஒரு கோடி தருவதாக உறுதியளித்த நடிகர் ரஜினி காந்த், இந்த டெங்கு நோய்க்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட, ஒரு தொகையை ஒதுக்கி, ரசிகர்களிடம் கொடுத்து, ஊரெங்கும் நில வேம்பு கசாயமாவது கொடுக்கலாமே என்கின்றனர் பொது மக்கள்.

அடுத்து விஜய் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். தமிழக அரசு, டெங்கு நோயை கட்டுப்படுத்த, இரு நூறு கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது. கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி தான் நடித்த திரைப்படங்களுக்கு சிக்கல் என வரும்போது,  ஆட்சியாளர்களை  சந்திக்கும் நடிகர்கள், தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் ஒரு நெருக்கடி வரும் போது ஏன் இதுபோன்ற சிந்தனை வருவதில்லை.

ஆனால், இந்த விசயத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும், சிறுபான்மை முஸ்லிம்  இயக்கங்களை வாய்விட்டு, நிறையவே பாராட்டலாம். நான் கவுன்சிலராக இருந்தால் மட்டுமே, தன் வட்டத்திற்கு நல்லது செய்வேன் என அடம்பிடிப்போர் மத்தியில், இவர்களை வைக்கலாம் உச்சியில், தனது சொந்த பணத்தை போட்டாவது, நில வேம்பு கசாயத்தை வழங்கி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் ஒன்று நடை பெறாமல் இருப்பதால் தான்,  டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமல், தமிழக அரசு தத்தளிக்கிறது.

கவுன்சிலர்களாக, ஊராட்சி தலைவர்களாக  இருந்தவர்கள், டெங்கு நோயை தன் பகுதிக்குள் கட்டுப்படுத்த  முன் வந்ததில்லை என குற்றச் சாட்டை .அந்தந்த பகுதி மக்கள் முன் வைக்கின்றனர். ஆனால், சிலர், பதவியில்லை என்றாலும், நில வேம்பு கசாயமாவது வழங்குகின்றனர்  என்கிறர்கள் சிலர். திரைப்படங்களில், தங்கள் சுய நலத்திற்கு ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகர்கள், நல்ல காரியத்திற்கு, தூண்டி விடாதது ஏன்? கட் அவுட் வைக்கவும், பாலாபிஷேகம் செய்யவும், கொடி தோரணம் கட்டுவதுதான்  ரசிகர்களின் சாதனையா?  அதையும் தாண்டி, மக்கள் சேவையில் ஈடுபட வைக்க , ஒரு தீக்குச்சியாவது கொளுத்திப்போட, அவர்களின் தலைவர்கள் முன் வர வேண்டாமா?

என காந்தி, காமராஜ் காலத்தில் இருந்த மூத்த அரசியல் வாதிகள் வாதிடுகின்றனர். இதில், தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த் பற்றியும் இங்கு கொஞ்சமாக சொல்லலாம். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சந்தித்து, அவர்களுக்கு, விஜய்காந்த்  உதவி செய்து வருவது,  காயம்பட்ட நெஞ்சங்களுக்கு, மருந்துபோடும் விதமாக அமைந்துள்ளது.