Home அரசியல் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையே கருத்துவேறுபாடு இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையே கருத்துவேறுபாடு இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்

23
0
SHARE

சென்னை, அக். 16&

.பி.எஸ்., .பி.எஸ். இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், இரட்டை இலை தொடர்பாக எதிர்தரப்பினர் கொடுத்த ஆவணங்களில் இருந்த குற்றத்தினை சுட்டிக்காட்டியுள்ளோம்.

இதன்மூலம்தவறானஆவணங்களைசமர்பித்திருக்கிறார்கள்எனவேஅவர்களுடையஆவணங்களைடிஸ்மிஸ்செய்துஇரட்டைஇலையைஎங்களுக்குஒதுக்கவேண்டும்எங்கள்தரப்பில்இருந்துகேட்டிருக்கிறோம்.

தொடர்ந்து நாளை இரண்டாது விசாரணை வரவிருக்கிறது. டி.டி.வி தினகரன் ஒரு போர்ஜரி. இந்த மாதிரியானவர்கள் ஒழுக்கமானவர்களை பார்க்கும் பொழுது தவறான கருத்துகளையே வெளிப்படுத்துவர்.

ஏனெனில் எங்கள் கட்சியின் தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுகுழுவைக்கூட்டி முறையாக ஆவணங்களை தயார் செய்து சி.டியின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் டி.டி.வி தினகரன் பொய்யான ஆவணங்களை சமர்பித்துள்ளனர் என்று கூறியுள்ளார். நாங்கள் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் பொழுது இரண்டு கோரிக்கைகள் வைத்தோம்.

அவை ஜெயலலிதாவின்  மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வைக்கவேண்டும், சசிகலா உட்பட குடும்பம் முழுவதும் கட்சியில் இருந்து நீக்கவேண்டும். ஏனென்றால் சசிகலா மட்டுமே கட்சியில்  உறுப்பினராக இருந்தார் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தினகரன் ஜெயலலிதாவல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

அப்படிப்பட்டவர்க இரண்ட இலை எங்களுக்கு தான் என்று சொன்னால் கேளிகூத்தாக இருக்கிறது. அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள  முடியும்.

தற்போது நடைபெறும் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் துணைமுதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பின்பே நிரைவேற்றப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு கூட்டுமுறைப்படியே இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் எதன் அடிப்படையில் முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் மனக்கசப்பு உள்ளதா? என ஊடகங்கள் கேட்கின்றனர் என்பது புதிராக உள்ளது.

ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று நினைத்து தற்போது நல்லாட்சி  அமைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இது மாதிரியான தகவலை பரப்புகின்றனர் என்று நினைக்கிறேன். அவர்கள் யாரும் என்பதும் ஊடகத்தினருக்கு  தெரியும் என்று கருதுகிறேன். தினகரன் ஆட்சியைக்கவிழ்க்கவேண்டும் என்று நினைக்கிறார்.

கட்சியிலே இல்லாத, பல்வேறு வழக்குகளை தன்னுள்ளே வைத்துள்ளவர்.,  ஜெயலலிதாவல் தூக்கி எரியப்பட்டவர், தினமும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்பவர் நாட்டிற்காக தியாகம் செய்து அவர் சிறைக்கு செல்லவில்லை.

சமூககுற்றம்செய்துசென்றவர். அப்படிபட்டவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்த தம்பித்துரையை அழைத்து தங்களுடன் இணைய வேண்டும் என்று கூறியிருந்தால், அதற்க்கு தம்பிதுரை  கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அவர்கள் வந்தால் இணைத்துக்கொள்வோம் என்று பேசியுள்ளார்.

தினகரனைகட்சியில்சேர்க்ககூடாது  என்ற முடிவோடு நாங்கள் இருக்கிறோம். ஆனால் தம்பித்துரை இது போன்று பேசுவது மிகவும் வேதனையளிக்கக்கூடியதாக உள்ளது. என்றார்.