Home இந்தியா தமிழகத்துக்கு பாதிப்பில்லா வகையில் காவிரியின் குறுக்கே அணைகட்டலாம் உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழகத்துக்கு பாதிப்பில்லா வகையில் காவிரியின் குறுக்கே அணைகட்டலாம் உச்ச நீதிமன்றம் கருத்து

29
0
SHARE

புதுடெல்லி, ஆக. 18& தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் காவிரியில் அணை கட்டலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007&ம் ஆண்டு பிப்ரவரி 5&ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.

அதில் தமிழகத்துக்கு அதிகமான தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வெளியானதால் இதை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.மேலும் தமிழகத்துக்கு அதிக அளவிலான தண்ணீர் விடவேண்டும் என்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் மட்டுமே முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியில் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் மேற்பார்வை குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண்காணிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.