Home தமிழகம் சர்வதேசமுதியோர் தினத்தையட்டி அன்னதானம்

சர்வதேசமுதியோர் தினத்தையட்டி அன்னதானம்

45
0
SHARE

கல்பாக்கம், அக். 14&

கல்பாக்கம்அடுத்தகொத்திமங்கலத்தில்இயங்கும்  ரெயின்போஸ் அறக்கட்டளை சர்வதேச முதியோர் தினத்தையட்டி முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கொத்திமங்கலத்தில் ரெயின்போஸ் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சுற்றுப்புற கிராமங்களிலுள்ள ஏழை, எளியவர்களுக்கு நலப்பணிகளையும் மாணவ மாணவிகளுக்கு மாலைநேர பயிற்சி வகுப்புகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச முதியோர் தினத்தையட்டி திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில் அமைந்துள்ள அறக்கட்டளையின் அலுவலகத்தில் திருக்கழுக்குன்றம் பகுதிக்குட்பட்ட முதியோர்களுக்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார். முன்னதாக முதியோர்களின் உறவினர்களிடையே பேசும்போது முதியோர்கள் தெய்வத்திற்கு ஈடானவர்கள், அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டுமென்றும் அவர்களை இழிவாக பேசக்கூடாது.

நாம் அவர்களுக்கு அன்புடன் செய்யும் பணிவிடையே நம் சந்ததியினர் நமக்கு செய்வார்கள் என்று பேசினார். இதில் அலுவலக ஊழியர்கள் ரஜினி, அமுல், கலைச்செல்வி உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.