Home சிறப்புச் செய்திகள் யோசனைகள் பலவிதம்!

யோசனைகள் பலவிதம்!

24
0
SHARE

கேரட், நெல்லி துவையல் உடலுக்கு நல்லது. இதை சுடு சோற்றுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இன்பமாய் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி வரும்.

மருதாணி இலைகளுடன் மொடக்கு அல்லது களிபாக்குடன் அரைத்த விழுதை கைகளில் பூசிட ஒருவாரம் வரை சிவப்பு மறையாது.

சாதம் மிகுந்தால் வாணலியில் கடுகு, பச்சைமிளகாய், வற்றல் மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளிதம் செய்து, சாதத்தைப் போட்டுக் கிளறவும். சூடேறியதும் இறக்கி தயிர், காய்ச்சியபால், கொத்துமல்லித் தழைக் கலந்து பரிமாற சூடான சுவையான தயிர்சாதம் ரெடி.

பாசிப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து பின் பழைய சாதம் சிறிது மஞ்சள் பொடி, உப்புத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வாணலியில் கடலெண்ணெய் + நெய் சமமாக கலந்து ஊற்றி, (1/2ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு) 1/2 ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி தாளிதம் செய்து கலவையில் கொட்டி கலந்து கொத்தமல்லித்தூவி பறிமாறவும். (தண்ணீர் ஊற்றாத சாதம் மட்டுமே தேவை)

அவரவர்க்குப் பிடித்த காய்கறிகள், பச்சைமிளகாய், 50கி துவரம்பருப்பு, 1 தக்காளி, 1 வெங்காயம் நறுக்கிப் போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். பின் 1 ஸ்பூன் மிளகுப் பொடி, 1/ 2 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, 1 கப் கெட்டித் தேங்காய் பாலூற்றி முதல் நாள் மிஞ்சிய சாதம் போட்டுக்கிளறி இறக்கவும். வாணலியில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் நெய்யில் கடுகு உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம், காம்புடன் கூடிய 3 உலர் மிளகாய், 10 முந்திரி, கறிவேப்பிலை தாளிதம் செய்து, கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை போட்டு சாதத்தைப் பதமாக கிளறி பறிமாறவும். பிஸிபேளாபாத் சுவையாக ரெடி. சாப்பிட்டுப் பாருங்கள்.

வாணலியில் தேங்காய் எண்ணெய், உப்பு போட்டு, சாதம் புரட்டி எடுக்கவும். வாணலியில்  நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், உலர் மிளகாய், கீறிய பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் மிளகாய்ப் பொடி, எலுமிச்சை அளவு கரைத்த புளியைக் கரைத்து ஒன்றாக கொதிக்க விடவும்.

வேறு வாணலியில் சிறிது கடுகு, வெந்தயம், தனியா, உலர்மிளகாய் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து குழம்பில் சேர்க்கவும், கடலெண்ணெயில் முந்திரி, நிலக்கடலை, கறிவேப்பிலை தாளிதம் செய்து கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கி, சாதத்தை அதில் கலந்து கொத்துமல்லி தூவ பரிமாறவும். சுவையான புளிக் குழம்பு சாதம் தயார்.