Home தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு98 அடியை தாண்டியது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு98 அடியை தாண்டியது

12
0
SHARE

மேட்டூர், அக். 13&

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அணையின் நீர்மட்டம் 98 அடியை தாண்டியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 15 ஆயிரத்து, 500 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து நேற்று மாலை 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

நேற்று காலை 10 மணி அளவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. சின்னாற்றில் 1070 கன அடி தண்ணீர் வருகிறது.

மெயின் அருவி, பெரியபாணி, சினிபால்ஸ், ஐந்து அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம், இந்த அருவிகளின் நின்று குளிக்க தடை விதித்துள்ளது.

இந்த அருவிகளுக்கு செல்லும் நடைபாதையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் கதவு மூடப்பட்டு, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் சுற்றுலா பயணிகள் சிலர் காவிரி ஆற்றின் கரையோரமாக நின்று குளித்துவிட்டு செல்கின்றனர், ஆனால் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் போலீசார், கரைப்பகுதியில் நின்று யாரும் குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். நீர் இழுப்பு விசை அதிகமாக இருக்கும் பகுதிக்கும் யாரும் சென்று விடாமல் இருக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கரையோர பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 31,236 கன அடியாக் உயர்ந்தது. ஒரே நாளில் விநாடிக்கு 12,011 கன அடி அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் 98 அடியை தாண்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here