Home உலகம் உலகை சுற்றி..!*

உலகை சுற்றி..!*

5
0
SHARE

 உலகம் முழுவதும் உடல் பருமன் நோயினால், 12 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில், ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளை பொறுத்தமட்டில், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

* வியட்னாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து உள்ளனர். காணாமல் போன 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

* உள்நாட்டு போர் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள காவல் நிலையத்தின் தலைமை அலுவலகத்தில் 3 தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவலர்கள் பலியானார்கள்.

* ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக, 5 நாட்களில் முடிவு எடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு, பிரதமர் மரியானா ரஜோய் காலஅவகாசம் அளித்து உள்ளார். ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் கட்டலோனியா தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

* இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here