Home விளையாட்டு பிரபல டென்னிஸ் வீரர் பாபியோ போக்னி மீதான தடை நீக்கம்

பிரபல டென்னிஸ் வீரர் பாபியோ போக்னி மீதான தடை நீக்கம்

5
0
SHARE

பாரிஸ், அக். 13&

இத்தாலி டென்னிஸ் வீரரான பாபியோ போக்னி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பெண் நடுவரை அவமதிக்கும் வகையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவருக்கு 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் 96 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது தண்டனையை குறைத்து கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது.

அவர் மீது போடப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியதுடன், அபராதத்தையும் 47 டாலராக குறைத்து அறிவித்துள்ளது. இது குறித்து போக்னி கூறுகையில், ”டென்னிஸ் வாரியம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் என் மீது தவறு உள்ளது. எனவே அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்.” என கூறினார்.