Home இந்தியா இமாச்சல பிரதேசத்துக்கு நவம்பர் 9&ந் தேதி தேர்தல்தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இமாச்சல பிரதேசத்துக்கு நவம்பர் 9&ந் தேதி தேர்தல்தேர்தல் ஆணையம் அறிவிப்பு

9
0
SHARE

புதுடெல்லி, அக்.13

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 9&ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்காமல் உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் வீரபத்ர சிங் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு நிறைவடைய உள்ள நிலையில் சட்டசபை தேர்தல் தேதியை நேற்று மத்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. புதுடெல்லியில் நேற்று மாலை நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி, இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 9&ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, டிசம்பர் 18&ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.

ஆனால், ஜனவரியில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள குஜராத்துக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆனால் குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே வரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

அதேபோல் டிசம்பர் 18&ந் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், குஜராத் தேர்தலும் அதற்கு முன்பாகவே முடிந்துவிடும் என்பது பொதுவான கணிப்பாக உள்ளது.

இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு 16&ந் தேதி வரும் வரையில் அனைவரும் காத்திருக்க வேண்டும்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிகிறது. அங்கு ஆனந்தி பென் தலைமையில் பா..க ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here