Home இந்தியா காஷ்மீரில் அரசு விளம்பரத்தில் பிரிவினைவாதத் தலைவர் படம்இந்திராகாந்தி, அன்னை தெரசா படத்துடன் இடம் பெற்றதால்...

காஷ்மீரில் அரசு விளம்பரத்தில் பிரிவினைவாதத் தலைவர் படம்இந்திராகாந்தி, அன்னை தெரசா படத்துடன் இடம் பெற்றதால் சர்ச்சை

11
0
SHARE

ஸ்ரீநகர், அக். 13&

ஜம்மு காஷ்மீரில் பெண்குழந்தைகள் தினத்தையட்டி, அரசு விளம்பரம் பேனர்கள் வைத்திருந்தது. இதில் பிரிவினைவாதத் தலைவர் படத்துடன் இந்திராகாந்தி, அன்னை தெரசா படம் இடம் பெற்றதால் பெறும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம் சார்பில், அனந்த்நாக் மாவட்டத்தில், கோகர்நேக் பகுதியில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. பெண் குழந்தைகள் தினத்தையட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு பா... சமூக நலத்துறை அமைச்சர் சஜ்ஜத் லோன் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இந்தநிகழ்ச்சிக்காகவைக்கப்பட்டிருந்தவிளம்பரபேனரில், காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் அசியா அந்தெராபி படம் இருந்தது.

இவர் ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுடன் நட்பு பாராட்டியவர். காஷ்மீரில், பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டவர்

இந்த பிரிவினைவாத பெண் தலைவர் படத்துடன், மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி, சமூக சேவகி அன்னை தெரசா உள்ளிட்டோரின் படங்கள் இருந்தன. பெண் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் படம் உள்ள பேனரில், பிரிவினைவாதத் தலைவர் படம் இருந்தது காஷ்மீரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, நிகழ்ச்சி ஏற்பாட்டு அதிகாரி ஷமீனா அக்தர், நாங்கள் பெண் தலைவர்கள் படங்களுடன் விளம்பர பேனர் அச்சிடச் சொன்னோம்.

ஆனால் அதில் தவறுதலாக அசியா அந்தெராபியின் படம் வந்துவிட்டது என தெரிவித்தார். இது அறிந்த உடன் நாங்கள் அந்த பேனர்களை அகற்றிவிட்டோம் என்றார். இந்த தவறு எப்படி நடந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதனை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர் பா..க வலியுறுத்தியுள்ளது. மேலும், அந்த விளம்பர பேனரில் கல்பனா சாவ்லா, சானியா மிர்சா, லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பெண் பிரபலங்களின் படங்களும் இருந்தது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here