Home இந்தியா ‘காந்தி ஒரு மனிதன், கடவுள் அல்ல’பீகார் முதல்வர் பேச்சு

‘காந்தி ஒரு மனிதன், கடவுள் அல்ல’பீகார் முதல்வர் பேச்சு

12
0
SHARE

பாட்னா, அக். 13

நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி ஒரு மனிதன்தான் கடவுள் அல்ல என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.

அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா தற்போது பீகார் முழுவதும் மாநிலக் கல்வித்துறையால் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பாட்னாவின்ஞான் பவன்அலுவலகத்தில் உள்ள சாம்ராட் அசோகா மையத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டு, காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகளை கதையாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், அகிம்சையை கொண்டே காந்தி தனது வாழ்நாள் முழுவதும் போராடினார்.

எனினும் அகிம்சை போதித்தவர் கொல்லப்பட்டது முரண்பாடானது. அவர் கொல்லப்பட்டது உண்மைதான். அவரது கொள்கைகள், சித்தாந்தங்களை அழிக்கமுடியாது. உலகம் முழுவதும் அவரது கொள்கைகள் பரந்துள்ளன. அவர் சொன்னது போல உழைப்பின்றி சொத்துகளை குவிப்பது நல்லதல்ல.

காந்தி கடவுள் அல்ல அவர் ஒரு மனிதர் தான் எனவே அவர் காட்டிய வழியைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர, வெறுமனே சிலைகளை அமைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here