Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

16
0
SHARE

மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோடி நல்ல நாட்கள் வர போகிறது என்றார். உண்மைதான். நல்ல நாட்கள் வந்துள்ளது. அமித்ஷாவும், அவருடைய மகனுக்கும். ஆனால் மக்களுக்கு இல்லை. மக்களை ஏமாற்றிய அவர்கள், இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். குஜராத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

& காங்கிரஸ் துணை தலைவர், ராகுல்.காங்கிரஸ் கட்சியும், ராகுலும் ஊழலில், கழுத்தளவு மூழ்கி கிடக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கும் பெண்கள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துகள் துரதிருஷ்டவசமானவை. அவர், பாரதிய ஜனதா பெண் தலைவர்களை கண்டு அச்சப்படுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கவே ராகுல் வந்துள்ளார்.

& பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர், ஷாநவாஸ் ஹ¨சைன்தேசிய கட்சிகள் தங்களின் சுய நலனுக்காகவே போராடுகின்றன. நாட்டின் கூட்டாச்சி அமைப்பையும் சீர்குலைத்து, வளர்ச்சி குறித்து பொய்யான தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நாட்டில் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இது மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல. மாநில மக்களின் நலனுக்காக பிஜூ ஜனதா தளம் தொடர்ந்து உழைக்கும்.

& ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக்.