Home சுடச்சுட மோடிக்கு எதிர்ப்பு: ராகுலுக்கு ஆதரவு டுவிட்டரில் மிரட்டும் நடிகை ‘குத்து’ ரம்யா

மோடிக்கு எதிர்ப்பு: ராகுலுக்கு ஆதரவு டுவிட்டரில் மிரட்டும் நடிகை ‘குத்து’ ரம்யா

6
0
SHARE

பெங்களூரு, அக். 13&

பிரதமர் மோடியை எதிர்த்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டுவிட்டரில் நடிகை குத்து ரம்யா கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சிம்புவுடன் குத்து படத்திலும் தனுசுடன் பொல்லாதவன் படத்திலும் நடித்தவர் ரம்யா.

இவர் கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும் சமீபத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்தவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி ஆவார். கடந்த மே மாதம் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவராக நியமிக்க்கப்பட்ட இவர். மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்களை டுவிட்டரில் விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்களையும் காங்கிரஸ் பிரச்சாரங்களையும் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். இவரது இந்த நல்ல பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து நடிகை குத்து ரம்யா கூறியதாவது:காங்கிரஸ் ஊடக அணி சிறிய அளவிலான குழுவாகத்தான் செயல்பட்டு வருகிறது. மிகவும் கட்டமைக்கப்பட்ட நிர்வாகத்துடன் மாநிலங்களுக்கு 4 பேர் வீதம் பொறுப்பேற்று செயல்பட்டு வருகி«றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here