Home மற்றவை மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு

மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு

6
0
SHARE

கும்மிடிப்பூண்டி, அக். 13& கும்மிடிப்பூண்டி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் வகையில் கொசு வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுதமிழகத்தில் மழை விட்டு விட்டு பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகிறது. இதனால் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சுகாதார துறையை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜெ.பிரபாகரன் உத்தரவின் பேரில் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சுகாதார ஆய்வாளர் ஆர்.முருகதாஸ் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் பன்பாக்கம் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் பாதித்த பகுதிகளில் பெரும் திரளாக சுத்தம் செய்யும் பணி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு, கொசு புழு பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதையடுத்து மேற்கண்ட கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அதிகாரி உமாதேவி கலந்துகொண்டார்ஊராட்சி உதவியாளர் சுகுமார் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகள் டெங்கு கொசு வேடமணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவர் ராஜேஷ்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here