Home தமிழகம் குரூப்&2ல் அடங்கிய பதவிகளுக்கு 20&ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப்&2ல் அடங்கிய பதவிகளுக்கு 20&ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

18
0
SHARE

சென்னை, அக். 13&  குரூப்&2ல் அடங்கிய பதவிகளுக்கு வரும் 20 ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  2014&15 மற்றும் 2015&16 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு2ல்  (நேர்காணல் பதவிகள்)  அடங்கிய ஆயிரத்து 94 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்,  விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த பணியிடத்திற்கான  முதல் நிலைத்தேர்வு 26.7.2015 அன்றும் மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு 21.8.2016 அன்றும் நடைபெற்றன.  இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களில் தெரிவித்துள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 2,169 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு  வரும் அக்டோபர் 20ந் தேதி முதல் நவம்பர் 3ந் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பாணை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.  அழைப்பாணை தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அழைப்பாணையினை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ்  சரிபார்ப்பில்   கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. மேலும்  அடுத்த கட்ட பரிசீலனைக்கும் கருதப்படமாட்டார்கள் என அதில் கூறியுள்ளார்.