Home அரசியல் அரசு ஊழியர் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சிக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசு ஊழியர் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சிக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

24
0
SHARE

சென்னை, அக்.13& காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல்  நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சிக்கிறது என மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.. செயல் தலைவர்  மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் திருத்திய ஊதிய விகிதம், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற பரிந்துரையின் அடிப்படையில், 11.10.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே உரிய காலவரையறைக்குள் அமல்படுத்துவதை அரசு,  அலுவலக கமிட்டி என்ற ஒன்றை நியமித்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்தது.

இந்தநிலையில் தான், அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன்,  இறுதியில் காலவரையற்ற போராட்டத்தை கையிலெடுத்துப் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அக்டோபர் 13ந் தேதிக்குள் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று காலநிர்ணயம் செய்து, தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றத்தீர்ப்பின்அடிப்படையில்செயல்வடிவம்பெற்றுள்ளஊதியக்குழுபரிந்துரைகளில்முரண்பாடுகள்இருக்கின்றன  என்று ஏற்கனவே அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து முதல்நிலைக் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத்தொகை இல்லை, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.21 ஆயிரம்  மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை. வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப்படிகளில் ஏமாற்றம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி 30 சதவீத சம்பள உயர்வு இல்லை என்பது போன்ற பல்வேறு குறைகள்  இன்னும் அரசு ஊழியர்களிடம்  நிலவுகின்றன. இதுதவிர, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைப் பற்றிப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி இன்னும் தன் அறிக்கையை கொடுக்காமல் தாமதிப்பது வேதனைக்குரியது.

முதல்வர் 7 வது ஊதியக்குழு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட , புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் கமிட்டி என்றைக்கு அறிக்கை கொடுக்கும்? அதுபற்றிய தீர்வு எப்போது வரும்? போன்ற கேள்விகளுக்கான பதில் தெரியாமல் உள்ளது.  இந்தப் பரிந்துரைகளை ஏற்கும் அறிவிப்பில்,  பணியாளர் சீரமைப்புக்குழு ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறியுள்ளது அரசு. ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது.

ஆகவே, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து, 7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின்  நீதியரசர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிருப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மக்களின் உள்ளத்திலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது என அதில் கூறியுள்ளார்.