Home தமிழகம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கக் குட்டிக்கு விஷ்ணு பெயர் என்று சூட்டினார், முதல்வர்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கக் குட்டிக்கு விஷ்ணு பெயர் என்று சூட்டினார், முதல்வர்

19
0
SHARE

படப்பை,அக்.13& வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே வண்டலூர், கேளம்பாக்கம் சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.7கோடியே 13 லட்சம் மதிப்பில் உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு ஆராய்ச்சி பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் புதியதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி தலைமையில் புதிய கட்டிடத்தில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற முதல்வர் அங்கு ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கும், கவிதா என்ற பெண் சிங்கத்திற்கும் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி பெண் சிங்கக்குட்டி பிறந்தது. இந்த பெண் சிங்கக்குட்டிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 27.9.2011ம் ஆண்டு ஜான்சி என்று பெயர் சூட்டினார். இந்த ஜான்சி என்ற பெண் சிங்கம் சிவா என்ற ஆண் சிங்கத்துடன் இணைச்சேர்ந்தது. கடந்த 6.2.2017ம் ஆண்டு தனது முதல் ஆண் சிங்கக்குட்டியை ஈன்றது. இதனைப்பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

புதியதாக பிறந்த இந்த ஆண் சிங்கக்குட்டிக்கு விஷ்ணு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். பின்னர் சிங்கக்குட்டி அடைக்கப்பட்டு இருந்த கூட்டிற்கு அருகில் சென்ற முதலமைச்சர்மைக்மூலம் விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு என மூன்று முறை சொல்லி சிங்கக்குட்டியை அழைத்து மகிழ்ந்தார். இதன் பின்னர் முதல்வர், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் பூங்காவில் உள்ள பேட்டரி வேனில் சென்று பல்வேறு விலங்குகளின் இருப்பிடங்களை சுற்றிப்பார்த்து பூங்காவை ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பென்ஞ்சமின் மற்றும் வனத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.