Home தமிழகம் கண் தசைகள் பாதிக்கப்பட்ட  சிறுவனுக்கு அறுவை சிகிச்சை

கண் தசைகள் பாதிக்கப்பட்ட  சிறுவனுக்கு அறுவை சிகிச்சை

17
0
SHARE

சென்னை, அக். 13& கண் தசைகள் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிறவி நிலை இமை இறக்கத்துடன் ஒற்றைக்கண் உயர்த்தல் குறைபாட்டை குணப்படுத்துவதற்கான  சிறப்பு அறுவை சிகிச்சையை உலகில் முதல் முறையாக சென்னையிலுள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை செய்துள்ளது.

இது குறித்து அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான கண் சிகிச்சை நிபுணர் டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார்வழக்கமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை நடைமுறை என்பது, முதல் அமர்வின்போது இன்ப்ரீயர் தசை வலுவிழப்பு செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து சுமார் 4 மாதங்கள் கழித்து கினாப்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் பலவீனமான சுப்பீரியர் தசைக்கு உயர்த்துதல் திறனை வழங்க இரு கிடைமட்டமான தசைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இந்த இரு அமர்வுகள் அறுவை சிகிச்சையை 4 மாத இடைவெளியோடு செய்வதற்கு பதிலாக இந்நோயாளிக்கு ஒரே அமர்விலேயே இந்த தனித்துவமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்ப்ரீயர் தசை வலுவிழப்பானது.

பலவீனமான சுப்ரீயர் தசைக்கு ஒரேயரு தசை இடமாற்றத்தோடும் மற்றும் உயர்த்துதலுக்கான மேம்பாட்டுக்கு அதிகமாக்குதல் செயல்பாடும் சிறப்பான அறுவை சிகிச்சை பலனை விளைவித்திருக்கிறது. இந்த சிகிச்சை முறையின் ஆதாயம் என்ன வென்றால், மாறுகண் பிரச்சினைக்கு ஒரே அறுவைசிகிச்சை மூலம் விரைவான சரிசெய்யும் சிகிச்சை பலன் குழந்தைக்கு கிடைத்திருக்கிறது. மாறுகண் பிரச்சினைக்கு ஒரேயரு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் கண்ணிமை இறக்க பிரச்சினையானது, 3 வாரங்களில் சரி செய்யப்படுவதன் மூலம் நோயாளிக்கு விரைவாகவே பார்வைத்திறன் சீரமைப்பு கிடைக்கப்பெறுகிறது.

வழக்கமான அறுவைசிகிச்சையில் முழுமையான அறுவைசிகிச்சை பலனை பெற்று குணமடைய குறைந்தபட்சம் 5 மாத காலம் தேவைப்படும். அறுவைசிகிச்சை செய்யப்பட்ட எங்களது நோயாளிக்கு விரும்பத்தக்க அளவில் எழிலூட்டல் கிடைத்திருப்பதோடு, பார்வைத்திறனும் 6/60லிருந்து 6/18 ஆக முன்னேற்றம் அடைந்திருக்கிறது,” என்று கூறினார்.

டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குநர் டாக்டர். அஸ்வின் அகர்வால் பேசுகையில், “இதனை ஒரு சவாலாக துணிவுடன் நாங்கள் ஏற்றுக்கொண்டு இந்த தனிச்சிறப்பான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்.

இந்த தனித்துவமான அறுவைசிகிச்சை முறையானது, ஒற்றைக்கண் உயர்த்தல் குறைபாடு பிரச்சினைக்கான ஒரு புதிய அறுவைசிகிச்சை நடைமுறையாக ஒரு அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.