Home இந்தியா இந்தியாவில் கிராம் தங்கம் மீதான விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றது?

இந்தியாவில் கிராம் தங்கம் மீதான விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றது?

59
0
SHARE

1) கரன்ஸி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொருத்து மாற்றி அமைக்கப்படும். 2) சர்வதேச காரணிகள்: கொந்தளிப்பான கொள்கைகள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து, நாணயங்களின் கூடைக்கு எதிராக டாலர் வலிமை ஆகியவை அடங்கும். 3) விலைமதிப்பற்ற உலோகங்களில் உலகளாவிய தேவையினை பொருத்த வரையில் மாற்றி அமைக்கப்படும். தேவைக் குறைவாக இருந்தால் வலுவான விலைகள் வீழ்ச்சியுறும். 4) வட்டி விகிதங்கள்: வட்டி விகிதங்கள் பெரிதாக தங்கம் மீதான விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் அமெரிக்கா உள்ளிட்ட நகரங்களில் குறைய வாய்ப்புகள் உள்ளது. 5) அரசு பாலிசி: சில நேரம் அரசு தங்கத்தினை அதிகம் நுகர்வதை எதிர்க்கின்றது.

உதாரணத்திற்கு தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள சவரன் தங்கப் பத்திரங்கள் எல்லாம் அடங்கும். ஏற்கனவே தேவைக்கு அதிகமாகத் தங்கம் இருக்கும் போது அதிகம் தங்கம் வாங்குவதினால் ரூபாயின் மதிப்பு சரியும் விலையும் உயரும். 6) விலை: இந்தியாவில் தங்கம் அதிகம் நுகர்வதைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் விலை உயர்வு ஆகும். இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 29,000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் மொத்தமாக விலை எப்படி மாறுபடுகின்றது என்பது மிக நீண்ட வழி முறையாகும். அதைப்பற்றி பின் வரும் காலங்களில் பார்ப்போம்.