Home சுடச்சுட டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மருத்துவக்குழு தமிழகம் வருகிறது பிரதமரை சந்தித்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மருத்துவக்குழு தமிழகம் வருகிறது பிரதமரை சந்தித்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

3
0
SHARE

டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்திய மருத்துவக்குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை, அக். 13& புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&

தமிழகத்தின் முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த கோப்பினை பிரதமரிடன் வழங்கச்சொன்னார். அதேபோல பிரதமரிடம் அந்த கோப்பினை வழங்கி அது குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். நிச்சயம் தமிழக வளர்ச்சிக்குண்டான அனைத்தையும் செய்வதாக பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தேவையான அளவு நிலக்கரி தரவேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை கொடுத்துள்ளேன்.

அரசியல் பேசவில்லை

பிரதமரை என்னைத் தவிர வேறுயாரும் பார்க்க முடியாது என்பது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். நிலக்கரி¢ பற்றாக்குறை இருப்பதனால் கொஞ்சம் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. தேவைப்படும் நிலக்கரி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை.

எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்டு ஜெயலலிதாவால் தற்போது ஆட்சியமைக்கப்பட்ட அ.தி.மு..வின் ஆட்சியை கொள்கை ரீதியில் கட்டிக்காப்பதே என்னுடைய மற்றும் தமிழக முதல்வரின் நோக்கமாக உள்ளது. எந்த பிரச்சனைகளும் இன்றி அவ்வாறே கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவை ஆளும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஓத்துழைப்பு வழங்குவதை குற்றமாக கருதமுடியாது.

மனக்கசப்பு ஏற்படாது

எந்த வித மனக்கசப்பும் என்னாலும், தமிழக முதல்வராலும் ஏற்படாது. தர்மயுத்தம் முடிந்த போது நாங்கள் நிபந்தனையில்லாமல் தான் இணைந்தோம். தர்மயுத்தத்தின் முடிவானது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.. இன்று ஒன்றிணைந்தது.

டெங்கு குறித்து பிரதமரிடம் பேசினேன். டெங்கு தொடர்பான அனைத்து விழிப்புணர்வுகளும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு உண்டான மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமான வகையில் உள்ளனர். அனைத்து உபகரணங்களும் தயார்நிலையில் வைத்து போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பில் மாநில அரசு ஈடுபட்டுவருகிறது.

மருத்துவ குழு வருகிறது

போதுமான வரை அதில் வெற்றியும் கண்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே டெங்கு ஒழியும் என கூறியிருப்பது, கூறியவர்களின் கருத்து. உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கும், டெங்கு வருவதற்கு என்ன சம்மந்தம் உள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடியும், தமிழகத்திற்கு மத்திய மருத்துவக்குழுவை அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் என்னுடனும், மற்றும் உள்ள அனைத்து அமைச்சர்களுடனும் ஆலோசித்தே முடிவெடுக்கிறார் என்றார்.

கருத்து வேறுபாடா?

முதல்வர் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு என்று சொல்லப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அவருடன் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்றார். கட்சியை வலுப்படுத்த டி.டி.வி.தினகரன் வந்தால் அவரையும் இணைத்துக் கொள்வீர்களா? என செய்தியாளர்கள் ஓ.பி.எஸ்.சிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ். இரண்டு அணிகள் இணைந்த நிலையில் இனி அணிகள் இணைப்பு என்பது இல்லை. இனி அ.தி.மு..வை வலுப்படுத்த கீழ்மட்ட அளவில் யாராவது வந்தால் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here