Home சுடச்சுட வரும் டிசம்பர் 31&க்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

வரும் டிசம்பர் 31&க்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

3
0
SHARE

புதுடெல்லி, அக்.13 ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31&ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ஏப்ரல் 12&ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், .தி.மு..வின் இரு அணிகள், தி.மு.., தே.மு.தி.., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன. தற்போதைய முதல்வர் எடப்பாடி அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், .பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அவர்களது அணியில் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அ.தி.மு.. வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும் ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. தேர்தல் கண்காணிப்பாளர்கள் எத்தனை சோதனைகளை நடத்தினாலும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், முக்கிய புள்ளிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டு, முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்துக் கொண்டே இருந்ததால், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

நேற்று, தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி, இமாச்சல் பிரதேசத்திற்கு நவம்பர் 9&ந் தேதி சட்டசபை தேர்தல் எனவும், குஜராத் தேர்தல் தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ரத்துசெய்யபட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31&ந் தேதிக்குள் நடத்தப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here