Home மற்றவை பெண்ணிடம் 10  சவரன் செயின் பறிப்புகொள்ளையனை விரட்டி பிடித்த மாணவர்கள்

பெண்ணிடம் 10  சவரன் செயின் பறிப்புகொள்ளையனை விரட்டி பிடித்த மாணவர்கள்

9
0
SHARE

கோயம்பேடு, அக். 4&

சென்னை, அண்ணா நகர் பகுதியில், ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை அறுத்துக் கொண்டு,  பைக்கில் தப்பியோடிய கொள்ளையனை, மாணவர்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அண்ணாநகர்,  அண்ணா ஆதர்ஷ் பள்ளி அருகில் வசிப்பவர் கிருஷ்ணகுமாரி (60) இவர், நேற்று முன் தினம் இரவு, சுமார் 7.45 மணியளவில், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக, வந்த மர்ம நபர் ஒருவன் கிருஷ்ணகுமாரி கழுத்தில் கிடந்த, 10 சவரன் தங்க செயினை  அறுத்துக் கொண்டு தப்பி ஓடினான்.

கிருஷ்ணகுமாரி,  திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டார். அங்கு நடந்து சென்றவர்கள் திருடனை துரத்தினர்.

அதற்குள் அவன் சற்று தொலைவில் தயாராக நின்றிருந்த பைக்கில், தனது கூட்டாளியுடன் ஏறி தப்பிச் சென்று விட்டான்.

இது குறித்து கிருஷ்ணகுமாரி தனது செல்போனில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்துஅந்த பகுதியில் ரோந்துப்பணியில்  இருந்த அண்ணாநகர் போலீசார்  அங்குவந்தனர். அவர்கள் கிருஷ்ணகுமாரியிடம் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

அதற்குள் இதே செயின் பறிப்பு கொள்ளையர்கள்,  பக்கத்து தெருவில் மற்றொருசெயின்  பறிப்பில் ஈடுபட்டு தப்பிக்க முற்சித்தனர். அங்கிருந்த ஐ..எஸ்.அகாடமியில் பயின்று வரும் மாணவர்கள்,  திருடர்களை தங்களது பைக்கில் சென்று விரட்டிப் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கிப் பிடித்தனர்.

மற்றொருவன் தப்பிச் சென்றுவிட்டான். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்றனர். மாணவர்கள் பிடிபட்ட செயின் பறிப்பு கொள்ளையனை போலீசில் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகுமாரியிடம் பறித்து சென்ற 10 சவரன் தாலிச்சரடை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ..எஸ். அகாடமி  மாணவர்களின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர்.