Home மற்றவை சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோல் மனு நிராகரிப்பு ...

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோல் மனு நிராகரிப்பு போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

4
0
SHARE

பெங்களூரு, அக்.4&

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், .தி.மு.. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சசிகலாவுக்கு பரோல் வழங்கும்படி, கர்நாடக சிறைத்துறை சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

இரண்டாகபிளவு

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.. இரண்டாக பிளவுற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும் அணிவகுத்து நின்றனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக்கப்பட்டார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அணிகள் இணைந்தன

இந்த நிலையில் அ.தி.மு..வில் இரு துருவமாக நின்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர்.  இதற்கிடையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்து விட்டது.

பரோலுக்கு

விண்ணப்பம்

இந்த நிலையில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவரை அவரின் உறவினர்கள் கவனித்து வருகின்றனர். இந்த நிலைமையில் சசிகலா அவரது கணவர் நடராஜனின் அருகில் இருக்க வேண்டும் என்று அவரின் உறவினர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து சசிகலா பரோலில் வர முடிவு செய்து உள்ளார். சசிகலாவின் இந்த முடிவு குறித்து, அவரின் வக்கீல் சுந்தரமூர்த்தி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ரமேஷிடம் மனு கொடுத்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:&

அறுவை சிகிச்சை

சிறையில் உள்ள எனது கட்சிக்காரர் சசிகலாவின் கணவர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது.

இதனால் அவரின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள சசிகலாவை 15 நாட்கள்பரோலில்அனுப்பகேட்டுக்

கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு ரமேஷ் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. மெக்ரத்துக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் குழு முடிவு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை

சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சசிகலாவின் மற்றொரு வக்கீலான எம்.ஜே. பாலசுப்பிரமணி, மனிதாபிமான அடிப்படையில் சிறைத்துறை பரோல் வழங்க எல்லா அதிகாரமும் உண்டு.

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவ அறிக்கையின் முக்கியத்துவம் கருதி சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

கர்நாடகபோலீசார்கோரிக்கை

சசிகலாபரோலில்தமிழகம்திரும்பினால், அவருக்கு கர்நாடக அரசு பாதுகாப்பு அளிப்பதா? அல்லது தமிழக போலீசார் பாதுகாப்பு அளிப்பதா என்பதில் குழப்பம் உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு பரோல் வழங்கலாமா? என்று தமிழக போலீசாரிடம் கர்நாடகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர், சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், சசிகலாவுக்கு பரோல் வழங்கினால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இயலுமா? .நடராஜன் குறித்து வெளிவரும் செய்திகள் உண்மைதானா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

பரோல் நிராகரிப்பு

இந்தநிலையில் சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அவசர சூழ்நிலையில் (மனிதாபிமானம் உள்பட) 3 நாட்கள் மட்டுமே பரோல் வழங்க முடியும். 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்றால் அதற்குரிய முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சசிகலா தரப்பு தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் போதுமான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

பரோலில்வரக்கூடாதுஎன்றுபிடிவாதமாகஇருந்தசசிகலா, அவரின் உறவினர்கள் மகாதேவன் உள்ளிட்ட 2 பேரின் இறப்பிற்கு கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. போதுமான ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் சிறைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here