Home மற்றவை பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியதுவிமானங்களை இயக்கவும் அதிகாரிகள்...

பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியதுவிமானங்களை இயக்கவும் அதிகாரிகள் முடிவு

8
0
SHARE

ஸ்ரீநகர், அக். 4&

விமான நிலையத்தில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து  விமானங்களை இயக்கவும் விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையம் மற்றும் விமானப்படைத் தளத்திற்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் முகாமிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரமாக துப்பாக்கிச் சண்டை நீடித்து வந்தது. இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முகாமிற்குள் நான்கு பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதைத்தொடர்ந்து விமானநிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்திற்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

விமான நிலைய சாலை மூடப்பட்டதை அடுத்து பயணிகள் ஏராளமானோர் சாலையோரங்களில் காத்துகிடந்தனர்.

விமான நிலையம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே தொடர் துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படை முகாம் அருகே பதுங்கியிருந்த மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து பயங்கரவாதிகள் தாக்குதலால் மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் விமான நிலையம் தற்போது பயணிகள் செல்ல திறக்கப்பட்டுள்ளது.பயணிகள் சிரமத்தை தவிர்க்க, முழுமையாக பரிசோதித்த பின்னரே விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விமான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானப் போக்குவரத்து இயக்குவது குறித்து இந்திய விமான நிலைய அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here