Home விளையாட்டு ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு ஷிகர் தவான், ராகுல் முன்னேற்றம் ஜடேஜா 2&வது...

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு ஷிகர் தவான், ராகுல் முன்னேற்றம் ஜடேஜா 2&வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

50
0
SHARE

துபாய், ஆக.16& ஐ.சி.சி. தரவரிசையில் ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதேவேளையில் டெஸ்ட் தரவரிசை ஆல்ரவுண்டர் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஷிகர் தவான் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3:0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் குவித்ததன் மூலம், ஷிகர் தவான் 10 இடங்கள் முன்னேறி 28வது இடத்தில் உள்ளார். 85 ரன்கள் குவித்த லேகேஷ் ராகுல், 2 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் உள்ளார்.

அதே நேரத்தில் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா, ஒரு இடம் பின்தங்கி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3வது டெஸ்ட் போட்டியில் தடை காரணமாக ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை. இதனால் அவர் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹாசன் முதலிடத்தை சுலபமாக பெற்றார்.

108 ரன்கள் குவித்து அசத்திய ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 68வது இடத்தில் உள்ளார். அதேபோல் பவுலர்களான முகம்மது ஷமி, 19வது இடத்திலும், உமேஷ் யாதவ் 21வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவிடம் தோற்ற நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்தகன் 61வது இடத்தை பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை இந்தியா 125 ரேட்டிங்குடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா (110) உள்ளது. மற்ற அணிகள் முறையே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் பட்சத்தில் அட்டவணையில் மாறுதல்கள் வரலாம்.