Home இந்தியா குற்றவாளிகளும், சுதந்திரக் காற்றை சுவாசிக்க ‘பரோல்’ விதிகளை திருத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு...

குற்றவாளிகளும், சுதந்திரக் காற்றை சுவாசிக்க ‘பரோல்’ விதிகளை திருத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

10
0
SHARE

புதுடெல்லி, அக். 4&

குற்றவாளிகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் திருந்தி வாழவும் குடும்ப, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், ‘பரோலில்அனுமதிப்பதற்கான விதிகளை மேம்படுத்த வேண்டும்என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர் 6ல் ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தடா நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன் அஸ்பாக்.

தனக்குதொடர்ந்துபரோல்அனுமதிமறுக்கப்படுவதைஎதிர்த்துஉச்சநீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், .கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

குற்றவாளிகளை திருத்தவே தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த நோக்கத்தை அடையும் வகையில் பரோலில் விடுவிப்பது சட்டத்திற்கு உட்பட்டது தான்.

தண்டனைக்காலத்தில்குறைந்தநாட்கள்பரோலில்குற்றவாளிகளைவிடுவிப்பது. அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும். சமூகத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை நிலைநிறுத்த முடியும்.

குற்றவாளிகள் தங்களின் குடும்ப மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பரோல் அனுமதிக்கப்பட வேண்டும்.

திருந்தி வாழ்வதில் ஆர்வம் உள்ள நன்னடத்தை மிக்க குற்றவாளிகள் குறைந்த காலத்திற்காவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். குற்றவாளிகள் திருந்தி வாழ்வது சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.

எனவே தண்டனைக் கைதிகளை பரோலில் தற்காலிகமாக விடுதலை செய்வது மற்றும் நீண்டகால தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது ஆகியன குறித்து 1955ல் இயற்றப்பட்ட விதிகளை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும்.

பரோலில் விடுவிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உரிய விதிகளை அரசு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பின் முழு விபரம் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here