Home சுடச்சுட வெள்ளத்தில் தவிக்கும் ஹைதராபாத் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வெள்ளத்தில் தவிக்கும் ஹைதராபாத் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8
0
SHARE

ஹைதராபாத், அக். 4&

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொட்டிய தொடர் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கனமழை, தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்தது. இதனால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது.வாகனங்கள் மழை நீரில் செல்ல முடியாமல் திணறியது.  பெருக்கெடுத்த ஒடிய தண்ணீர், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பாய்ந்து சென்றது.

மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, ஏராளமான இடங்களில் வணிக நிறுவனங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

நிலைமையை எதிர்கொண்டு இயல்புநிலைக்கு திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகத்துக்கு முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, 2நாட்களுக்கு ஹைதராபாத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here