Home இந்தியா பாலியல் வழக்கில் சிறையில் உள்ள குர்மீத்வளர்ப்புமகள் ஹனிபிரீத் கைது

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள குர்மீத்வளர்ப்புமகள் ஹனிபிரீத் கைது

20
0
SHARE

சண்டீகர், அக். 4&

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத் இன்சானை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

தேராசச்சாசவுதாஎன்றஇயக்கத்தின்தலைவராகஉள்ளவர்சாமியார்குர்மீத்ராம்ரஹீம்ஆவார். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் சிர்சா நகரில் ஆசிரமத்தை தொடங்கினார்.

இங்கு கடந்த 2002ஆம் ஆண்டு இரு பெண் சீடர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டிவிட்டதே ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் என்று தகவலறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த ஆயத்தமாகினர்.  இதனை அறிந்த ஹனிபிரீத் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் அவர் எங்கும் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸை விடுத்தனர்

இதனிடையே ஹனிபிரீத் நேற்று முன் தினம் இந்தியா டுடே நாளிதழுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டி அளித்திருந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஹனிபிரீத்துக்கும் ராம் ரஹீமுக்கும் தவறான உறவு உள்ளதாக அவரது முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா பரபரப்பு புகார் கூறியிருந்தார்.  இந்த குற்றச்சாட்டை தமது பேட்டியின் மூலம் ஹனிபிரீத் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.