Home தமிழகம் தீபாவளி சிறப்பு கைத்தறி விற்பனைஅமைச்சர் துவக்கி வைத்தார்

தீபாவளி சிறப்பு கைத்தறி விற்பனைஅமைச்சர் துவக்கி வைத்தார்

6
0
SHARE

சென்னை, அக். 4&

தீபாவளி சிறப்பு கைத்தறிக் விற்பனையை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநுலீல் துறையின் கீழ் இயங்கும்லூம்வேர்ல்டுவிற்பனை நிலையத்தை மக்களிடையே பிரபலப்படுத்த, அதன் விற்பனையினை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திருச்சி கைத்தறி பெருங்குழுமத் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீவித்யா கல்யாண் மகாலில்மாபெரும் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும்

விற்பனைநேற்று தொடங்கியது. (3ம் தேதி) முதல் 15ம் தேதி நடைபெறுகிறது. இக்கைத்தறி கண்காட்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், .எஸ்.மணியன் திறந்து வைத்து  முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்று பிரசித்தி

பெற்ற கைத்தறித் துணி ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், கோயம்புத்தூர் மென்பட்டுச் சேலைகள், பரமக்குடி பருத்திச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், விளந்தை சேலைகள், ஈரோடு மாவட்டத்திலிருந்து போர்வைகள், வீட்டு உபயோக துணி வகைகள், துண்டு ரகங்கள், பவானி ஜமக்காளம் சின்னாளப்பட்டி பருத்திச் சேலைகள், லுங்கிகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி துணி வகைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி 15ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியில், கைத்தறி துணிகளின் விற்பனைக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் 20 சதவீத தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீதம் சேர்த்து 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் ரூ.1.00 கோடி மதிப்பிற்கு விற்பனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் ச.முனியநாதன், மற்றும் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here